ஹோம் /திருவாரூர் /

 மன்னார்குடி `பாப் கட்’ செங்கமலம் யானைக்கு நீச்சல் குளம் ரெடி..!

 மன்னார்குடி `பாப் கட்’ செங்கமலம் யானைக்கு நீச்சல் குளம் ரெடி..!

மன்னார்க்குடி

மன்னார்க்குடி

Mannargudi Rajagopalaswamy Temple | மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை “பாப் கட் செங்கமலம்” குளித்து மகிழ இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீச்சல் குளம் கட்டி தரப்பட்டுள்ளது.

 • Local18
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் செங்கமலம் என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. 34 வயதாகும் இந்த யானைக்கு “பாப் கட் செங்கமகம்” என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அதாவது எந்த யானைக்கும் இல்லாத அளவிற்கு செங்கமலத்திற்கு தலைப்பகுதியில் அடர்ந்து வளர்ந்த முடி காணப்படுகிறது. அதை அந்தயானை பாகன் அழகாக வெட்டி விட்டார். பார்ப்பதற்கு இந்த கட்டிங் பாப் கட் போல இருக்கும். அன்று முதல் இந்த யானை “பாப்கட் செங்கமலம்” என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படுகிறது.

  இந்த அழகான சிகை அலங்காரத்தை பார்க்கவே கோயிலில் கூட்டம் அதிக அளவில் குவிந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதன் ரசிகர்களாயினர். செங்கமலம் யானை கோயிலில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் பாகன் ராஜகோபால் அவர்களின் வழிகாட்டுதலின் படி கோயிலை வலம் வரும். பாகன் சொல் பேச்சை தட்டாத நடக்கும் யானையை அனைவரும் பார்த்துமகிழ்ச்சி அடைவர்.

  பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் செல்லப் பிள்ளையாக வலம் வரும் பாப் கட் செங்கமலம் யானை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் குளிக்க வசதியாக கோயில் நிர்வாகம், ஏற்கனவே ரூ.75,000 செலவில் ஷவர் வசதியை செய்து கொடுத்துள்ளது.

  Also Read : காதல் ரோஜாவே... பாட்டு பாடிய தாயை பார்த்து ரசித்த குழந்தை - வைரல் வீடியோ

  இந்த நிலையில், செங்கமலம் யானைக்கு கோயில் வளாகத்தில் நீச்சல் குளம் ஒன்று கட்டித்தர வேண்டும் என மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா கோரிக்கை வைத்ததை தொடர்ந்து செங்கமலம் யானைக்கு நீச்சல் குளம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.

  அதன்பேரில், கோயில் வளாகத்தில் ஈசானிய மூலையில் சுமார் ஆறரை அடி ஆழத்தில் 500 சதுர அடி பரப்பளவில் ரூ.10 லட்சம் மதிப்பில் செங்கமலம் யானை குளித்து மகிழ புதிதாக நீச்சல் குளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து தற்போது திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.

  இது தொடர்பாக பேசிய மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பக்தர்கள், ”இந்த செங்கமலம் யானைக்கு மன்னார்குடி கோயிலில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு, அந்த அளவிற்கு இந்த செங்கமலம் யானை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

  அது மட்டுமல்லாமல் அதன் ”பாப் கட்” சிகை அலங்காரம் பார்ப்பவர் கண்களை கொள்ளை கொள்ளும் விதமாக இருக்கும்.

  அந்த பாப் கட்டிங் ஸ்டைல் முடியோடு செங்கமலம் யானை தலையை ஆட்டும் போது பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். தற்போது எங்கள் செங்கமலம் யானை குளிப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீச்சல் குளம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது செங்கமலம் யானைக்கு மிகவும் புத்துணர்ச்சியை அளிக்கும் .சில நாட்களில் இந்த நீச்சல் குளம் திறக்கப்பட உள்ளது, அதில் செங்கமலம் யானை குளிப்பதை காண்பதற்கு நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றனர்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Local News, Mannargudi, Thiruvarur