முகப்பு /திருவாரூர் /

திருவாரூர் மக்களுக்கு நற்செய்தி... சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க மானியம்..

திருவாரூர் மக்களுக்கு நற்செய்தி... சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க மானியம்..

சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க மானியம்

சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க மானியம்

Tiruvarur District News : திருவாரூர் மாவட்டத்தில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க  தாட்கோ சார்பில் மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டத்தில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க தாட்கோ சார்பில் மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது:  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், தமிழ்நாடு சிமெண்ட் கழகத்துக்கு விற்பனை முகவர் நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்திற்கு 2 ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகை ரூ.3 லட்சத்தில் 30 சதவீதம் மானியம் ரூ.90,000 வீதம் ரூ.1.80 மானியமும், பழங்குடியினர் ஒருவருக்கு மானியம் ரூ.90,000 வீதம் ரூ.0.90 லட்சம் மானியமும் என மொத்தம் 3 நபர்களுக்கு ரூ 2.70 லட்சம் மானியம் இலக்கு நிர்ணயித்து அரசாணை வரப்பெற்றுள்ளது.

இதையும் படிங்க : திருவாரூரில் இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்.. அச்சத்தில் அனுதினமும் வாழும் கிராம மக்கள்..

இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக்கூடாது.

தாட்கோவின் மாவட்ட அளவிலான தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்ட பின் சிமெண்ட் முகவருக்கான விண்ணப்பங்கள் டாம்செம் நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படும். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5000 வைப்புத்தொகை டாம்செம் நிறுவனத்திற்கு செலுத்தப்படும்.

கூடுதல் செலவினத்தை ஈடுசெய்ய மற்றும் அதிகபட்ச மானியத்தொகை சென்றடைய, ஆதிதிராவிட தனி நபர்களுக்கான திட்ட த்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 இலட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் விடுவிக்கப்படும்.

மேலும், இதில் பயன்பெற விரும்புபவர்கள் தாட்கோ என்ற இணையதளத்தில் குடும்ப அட்டை, சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, பான் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம், திட்ட அறிக்கை ஆகிய ஆவண ங்களுடன் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மேலாளர் அலுவலகம், அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி எதிரில், நாகை பைபாஸ் ரோடு, திருவாரூர் என்ற முகவரியிலும், 04366-250017 மற்றும் 9445029478 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்\". இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Tiruvarur