திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலைச்சேரி என்னும் கிராமத்தில் இயங்கி வருகிறது திருத்துறைப்பூண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
2015 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட இந்த கல்லூரியில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிலையில், இக்கல்லூரியில் கழிப்பறை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சரியாக செய்யப்படவில்லை என்று அங்கு படிக்கும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கல்லூரியில் உள்ள கழிப்பறைகள் கதவுகள் சேதம் அடைந்த நிலையில் இருப்பதாகவும் மேலும் கழிவறையில் தண்ணீர் வசதியின்றி இருப்பதாகவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க : விளை நிலங்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்.. திருவாரூர் விவசாயிகள் வேதனை..
நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் மூலம் கல்லூரியில் படிக்கக்கூடிய ஆயிரம் மாணவர்களுக்கு போதுமானதாக குடிநீர் கிடைப்பதில்லை என கூறுகின்றனர்.
இது தொடர்பாக பேசிய மாணவர்கள், “நாங்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த திருத்துறைப்பூண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி கற்று வருகிறோம். பெரும்பாலும் இங்கு படிக்கக்கூடிய மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருபவர்கள் தான்.
அதாவது நெடுந்தொலைவில் இருந்து தான் வருகிறோம். ஆனால், 4 ஆண்டுகளாக எங்கள் கல்லூரியில் குடிநீர்,கழிப்பறை போன்ற வசதிகள் முறையாக செய்யப்படவில்லை.
மாணவர்கள், பயன்படுத்தும் கழிவறையின் கதவுகள் அனைத்தும் சேதமடைந்தும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளன. இதனால் நாங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கழிப்பறை மோசமாக இருப்பதால் இங்கு படிக்கக்கூடிய மாணவர்கள், கழிப்பறை பயன்படுத்தாமலே உள்ளனர். இதனால் மாணவர்களின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும், இந்த கல்லூரி கட்டப்பட்ட இடத்தில் சல்பர் எனும் வேதிப்பொருள் அதிகமாக இருப்பதால் குடிநீரில் அதிக அளவு சல்பர் கலந்த தான் வரும். அதனால் கல்லூரி நிர்வாகம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வைக்கப்பட்டது.
ஆனால், அந்த இயந்திரத்தில் இருந்து வரக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கல்லூரியில் படிக்கக்கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை.இதனால் இந்த கல்லூரியில் படிக்கக்கூடிய நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். உடனடியாக உயர்கல்வித்துறை எங்களது கல்லூரிக்கு குடிநீர்,கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
செய்தியாளர் : சுர்ஜித் - திருவாரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruvarur