முகப்பு /செய்தி /திருவாரூர் / திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் வந்து தேர்வு எழுதிய மணமகள்... கல்லூரி வாசலில் காத்திருந்த மணமகன்...!

திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் வந்து தேர்வு எழுதிய மணமகள்... கல்லூரி வாசலில் காத்திருந்த மணமகன்...!

மணக்கோலத்தில் தேர்வு

மணக்கோலத்தில் தேர்வு

Thiruvarur | திருவாரூர் மாவட்டத்தில் திருமணம் நடந்த நிலையில், புதுமணப்பெண் தனது இறுதி பருவத் தேர்வை மணக்கோலத்தில் வந்து எழுதிச் சென்றார்.

  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூரில் திருமண கோலத்துடன் மாணவி ஒருவர் செமஸ்டர் தேர்வு எழுதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

நாகை மாவட்டம் மேல ஓதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காவலரான பத்மநாபன் என்பவர், திருவாரூர் சித்தாநல்லூரை சேர்ந்த கல்லூரி மாணவி மதுமிதா என்பவரை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் திருவாரூரில் உள்ள திருமண மண்டபத்தில் காலை 7.30 மணி முதல் 9.30 வரையிலான முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது.

மதுமிதா பி.காம் 3ஆம் ஆண்டு பயின்று வரும் நிலையில், இறுதிப் பருவத் தேர்வு தொடங்கியுள்ளது. கல்வியின் முக்கியத்துவம் கருதி, திருமணம் முடிந்தவுடன், மணக்கோலத்துடன் மதுமிதா தேர்வு அறைக்குச் சென்றார். அவரின் கணவர் தேர்வு எழுத அழைத்துச் சென்றார்.

மேலும் படிக்க... விரைவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம்... காங்கிரஸ் அறிவிப்பு..!

' isDesktop="true" id="988218" youtubeid="1ZzLrl5XNE0" category="tiruvarur">

top videos

    தேர்வு முடிந்து மனைவி வரும் வரை, காவல் கணவரான பத்மநாபன் கல்லூரி வளாகத்தில் காத்திருந்தார். பாலின சமத்துவ தேர்வுக்காக அழைத்து வந்து, பாலின சமத்துவத்தை நிலை நாட்டிய மணமகனுக்கு பேராசியர்கள் உட்பட அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

    First published:

    Tags: Exam, Marriage, Thiruvarur