முகப்பு /செய்தி /திருவாரூர் / திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் - தென்னக ரயில்வே அறிவிப்பு

திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் - தென்னக ரயில்வே அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சிறப்புமிக்க இக்கோவிலில் ஏப்ரல் ஒன்றாம் தேதி ஆழி தேரோட்டம் நடைபெற இருப்பதால் தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. 

  • Last Updated :
  • Tamil Nadu, India

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பஞ்சபூத தலங்களில் பூமிக்கு உரிய தளமாகவும் சர்வதேச பரிகாரத் தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ திருக்கோவில் ஆழித்தேரோட்டம் உலக புகழ்பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என பெருமை பெற்றதாகும்.

சிறப்புமிக்க இக்கோவிலில் ஏப்ரல் ஒன்றாம் தேதி ஆழி தேரோட்டம் நடைபெற இருப்பதால் தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. மார்ச் 31ஆம் தேதி 6.10 க்கு விழுப்புரத்திலிருந்து புறப்படும் ரயில் மயிலாடுதுறை வந்து அங்கிருந்து இரவு 9:20க்கு பேரளம் பூந்தோட்டம் நன்னிலம் வழியாக திருவாரூருக்கு இரவு 10:20 மணிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளாது.

மேலும் மறுநாள் காலை 5 மணிக்கு புறப்பட்டு 9.05 மணிக்கு விழுப்புரம் சென்று சேர்கிறது அதேபோல ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 9 மணிக்கு புறப்படும் ரயில் பொன்மலை திருவரம்பூர் பூதலூர் தஞ்சாவூர் சாலியமங்கலம் நீடாமங்கலம் கொடராசேரி வழியாக திருவாரூருக்கு 10.40 மணிக்கு வந்து சேரும்.

Read More : ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை... திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

மதியம் 3:40 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு மாலை 6:05க்கு திருச்சி சென்றடைகிறது திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தேரோட்டம் நடைபெற இருப்பதால் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை விடுத்தார் அதன் அடிப்படையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

top videos

    செய்தியாளர் : ராஜசேகர் (திருவாரூர்)

    First published:

    Tags: Thiruvarur