ஹோம் /திருவாரூர் /

திருவாரூர் மாவட்ட கல்லூரி மாணவ - மாணவிகளே... இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க!

திருவாரூர் மாவட்ட கல்லூரி மாணவ - மாணவிகளே... இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க!

திருவாரூர்

திருவாரூர்

Tiruvarur District News : கல்வி உதவித்தொகை தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு, இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

  முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ- மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் கடந்த 10-ம் தேதி முதல் செயல்பட தொடங்கியுள்ளது.

  இதையும் படிங்க : 24 மணிநேரமும் பெட்டிக்கடையில் கிடைக்கும் அரசு மதுபானம்.. கண்டுகொள்ளாத காவல்துறை.!

  புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ம் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். புதிய இனங்களுக்கு இணையதளம் டிசம்பர் 15-ம் தேதி முதல் செயல்பட தொடங்கும்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  மேலும், விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகலாம். மேலும் அரசு இணையதளம் www.bcmbcmw.tn.gov.in-ன்இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tiruvarur