ஹோம் /திருவாரூர் /

திருவாரூரில் பழங்குடிகள் என்பதால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம்

திருவாரூரில் பழங்குடிகள் என்பதால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம்

tiruvarur

tiruvarur

Tiruvarur District News : திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள கழுவள்ளி என்ற பழங்குடியின கிராம மக்களுக்கு சாலை வசதிகள் இல்லாமல் 50 ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர்.  

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கழுவமுள்ளி என்னும் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இதே பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இவர்களது கிராமத்திற்கு இதுவரை சாலை வசதி என்பதே கிடையாது.

அரசாங்கம் பழங்குடியின மக்கள் என்பதால் தங்களுக்கு சாலை வசதியை ஏற்படுத்தி தராமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பழங்குடிகள் என்பதால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம்

நகராட்சி நிர்வாகம் தங்கள் பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய மக்கள் வாழாத பகுதிகளில் எல்லாம் சாலை வசதியை ஏற்படுத்தி கொடுத்திருப்பதாகவும்.தாங்கள் பழங்குடிகள் என்பதாலேயே இன்று வரை எங்களுக்கு சாலை வசதியை ஏற்படுத்தி தராமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க : குளத்தின் நடுவே உள்ள கோயிலுக்கு இவ்வளவு சிறப்புகளா..? திருவாரூர் போன கண்டிப்பா இங்க போயிட்டு வாங்க..!

மேலும் இது தொடர்பாக பேசிய கிராம மக்கள் “ நாங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் வாழ்ந்து வருகிறோம். கிட்டத்தட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த கழுமுள்ளி கிராமத்தில் வசித்து வருகிறோம்.

ஆனால், தற்போது வரை எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி என்பதே கிடையாது. அருகில் இருக்கக்கூடிய மக்கள் வாழாத பகுதிகளுக்குயெல்லாம் திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம் சாலை வசதியினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால், நாங்கள் வசிக்கக்கூடிய இந்த பகுதியில் பழங்குடிகள் என்பதாலே எங்களுக்கு சாலை வசதி என்பது மறுக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் எத்தனையோ முறை இந்த பிரச்சனை தொடர்பாக அரசாங்கத்திற்கு பல மனுக்களை அனுப்பியும், இதுவரைக்கும் எங்களுடைய இந்த பிரச்சனை தீர்க்கப்பட வில்லை. உடனடியாக எங்கள் பகுதியில் திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம் சாலை வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

முறையான சாலை வசதிகள் இல்லை என்பதால் இந்த கிராம மக்கள் அவசர மருத்துவ தேவைக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். ஆம்புலன்ஸ் கூட இந்த பகுதிகளுக்கு வர முடியாதநிலை உள்ளது.

பழங்குடிகள் என்பதால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இந்த கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்லக்கூட கடினமாக இருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்டஅதிகாரிகள் அல்லது அரசாங்கம் போர்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் : சுர்ஜித் - திருவாரூர்

First published:

Tags: Local News, Tiruvarur