ஹோம் /திருவாரூர் /

திருவாரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்- தேதி, விவரங்கள் வெளியீடு

திருவாரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்- தேதி, விவரங்கள் வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாம்

Tiruvarur District | திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்திருப்பதாவது: திருவாரூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்காக தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புஏற்படுத்தி தரும் வகையில், மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் விர்ச்சு தொண்டு நிறுவனம் இணைந்து தனியாா் வேலை வாய்ப்பு முகாமை டிசம்பர் 18ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடத்தவுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த முகாமில், 18 முதல் 35 வயதுவரையுள்ள காது கேளாத மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கூகுள் லிங்கில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தொழிற் பயிற்சியில் சேரவும், கடனுதவி பெறவும் விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

Must Read : சாபங்கள் நீங்க குமரியில் வழிபடவேண்டிய குகநாதீஸ்வரர் கோவில் - முருகன் தோஷம் நீங்க சிவனை வழிபட்ட தலம்

திருமண பதிவு:

திருமணம் செய்துகொள்ள விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு திருவாரூா் லயன்ஸ் சங்கம் மூலம் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதால், அவா்களும் இம்முகாமில் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Job Fair, Local News, Thiruvarur