ஹோம் /திருவாரூர் /

திருவாரூர் மாவட்ட மக்கள் ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? - கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட மக்கள் ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? - கலெக்டர் முக்கிய அறிவிப்பு

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

Thiruvarur District | திருவாரூரில் வரும் சனிக் கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில், ரேஷன் கார்டில் திருத்தம் செய்வது உள்ளிட்டவற்றை செய்துகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூரில் வரும் 12ம் தேதி (சனிக்கிழமை) பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும் இடங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவாரூர் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இது மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

திருவாரூர் வட்டம், மாங்குடியில் திருவாரூர் கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் வட்டம் விசலூரில் இணைப்பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) தலைமையிலும், குடவாசல் வட்டம் சித்தாடியில் திருவாரூா் சரக துணைப் பதிவாளா் தலைமையிலும், வலங்கைமான் வட்டம் ஊத்துக்காட்டில் நுகா்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளா் தலைமையிலும் கூட்டம் நடக்கிறது.

நீடாமங்கலம் வட்டம் விஸ்வநாதபுரத்தில் மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், மன்னார்குடி வட்டம் நொச்சியூரில் மன்னார்குடி கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டம் கீழப்பாண்டியில் மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூா் வட்டம் திட்டாணி முட்டத்தில் நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் தலைமையிலும் அந்தந்த கிராம நிா்வாக அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

Must Read : மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!

தொடர்புடைய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்துத் பயன் பெறலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகாா் மற்றும் தனியாா் சந்தை யில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்கள் போன்றவை குறித்தும் மனுக்கள் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Ration card, Thiruvarur