ஹோம் /திருவாரூர் /

போதை ஆசாமிகளின் பிடியில் திருவாரூர் பேருந்து நிலையம்... வழிப்பறியும் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்!

போதை ஆசாமிகளின் பிடியில் திருவாரூர் பேருந்து நிலையம்... வழிப்பறியும் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்!

திருவாரூர் பேருந்து நிலையம்

திருவாரூர் பேருந்து நிலையம்

Tiruvarur Bus Stand | திருவாரூர் நகர் பேருந்து நிலையமானது பெண்களுக்கு பாதுகாப்பற்று விளங்குவதாகவும் மதுபோதை ஆசாமிகளின் பிடியில் இருந்து அதனை மீட்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  திருவாரூர் புதிய பேருந்து நிலையமானது விளமல் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு திருவாரூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு 11.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

  2012 ம் ஆண்டு முதற்கட்டமாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், இடையில் நிதிப் பற்றாக்குறையால் பேருந்து நிலையத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

  இதையடுத்து, நிதிப்பற்றாக்குறையைச் சரி செய்வதற்காக மேலும் ரூ.7 கோடியே 36 லட்சம் ஒதுக்கப்பட்டு 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி மொத்தமாக ரூ.13 கோடியே 36 லட்சம் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் 8 ஆண்டுகள் கழித்து திறக்கப்பட்டது.

  இதையும் படிங்க : திருவாரூரில் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி தரவில்லை- மாவட்ட ஆட்சியர் விளக்கம்

  இந்நிலையில், தற்போது இந்த பேருந்து நிலையமானது இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மற்றும் போதை ஆசாமிகளின் கூடாரமாக மாறி இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி இங்கு இரவு நேரங்களில் வழிப்பறி, பணம் பறிப்பு போன்ற சம்பவங்களும் அறங்கேறிவருகின்றன.

  இதனால் இரவு நேரங்களில் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துவதற்கே பொதுமக்கள் மற்றும் பெண்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மது போதையில் உள்ள ஆசாமிகள் பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்களை கிண்டல் செய்து ரகளையில் ஈடுபடும் சம்பவங்களும் தற்போது அதிகரித்துள்ளன.

  இதையும் படிங்க : WATCH - ரூ.31 லட்சம் மதிப்பு.. செல்போன் டவர காணோம்.. திருவாரூரை அதிர வைத்த திருட்டு புகார்!

  எனவே உடனடியாக திருவாரூர் நகராட்சியும், நகர காவல் துறையும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி இந்த பேருந்து நிலையத்தை போதை ஆசாமிகளில் பிடியிலிருந்து மீட்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  இதுகுறித்து திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் தர்மலிங்கம் பேசுகையில், “இந்த புதிய பேருந்து நிலையமானது திருவாரூர் மக்கள் அதிகப்படியாக பயன்படுத்தக்கூடிய மிக முக்கியமான இடமாக உள்ளது. ஆனால், இந்த பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் வழிப்பறி, பணம் பறிப்பு போன்ற செயல்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  மேலும், இந்த பேருந்து நிலையம் இரவு நேரத்தில் மது அருந்தக்கூடிய மினி பாராக இயங்கி வருகிறது. இங்கு மது அருந்தும் ஆசாமிகள் மது போதையில், இங்கு வரும் பெண்களிடம் ரகளையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. உடனடியாக நகர காவல்துறை இந்த பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், இரவு நேர காவலர்களை பணியமர்த்தியும் இதுபோன்ற சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும்” என்றார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tiruvarur