முகப்பு /திருவாரூர் /

கொளுத்தும் கோடை வெயில்.. திருவாரூரில் களைகட்டும் பதநீர் விற்பனை!

கொளுத்தும் கோடை வெயில்.. திருவாரூரில் களைகட்டும் பதநீர் விற்பனை!

X
பதனீர்

பதனீர் விற்பனை

Thiruvarur pathaneer sale | திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பதநீர் விற்பனை நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Thiruvarur, India

தமிழ் மாதங்களில் சித்திரை, வைகாசி, ஆணி, ஆடி ஆகிய மாதங்கள் இளவேனில்,முதுவேனில் காலங்களாகும் இந்த மாதங்களில் தமிழகத்தில் அனேக இடங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கு குளிர்பானங்களையும் இளநீர், பனை நுங்கு, தர்பூசணி, பழச்சாறு உள்ளிட்ட பொருட்களை அதிக அளவில் தேடி வாங்கி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பதனீர் விற்பனை நடைபெற்று வருகிறது. பதனீர் விற்பனை செய்வதற்காககோடை காலங்களில் திருநெல்வேலி,தென்காசிமாவட்டங்களில் இருந்து பனை மரங்கள் சார்ந்து தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் பதனீரினை சாலை ஓரங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் ஒரு டம்ளர் பதனீர் 20 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பதனீர் 70 முதல் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலங்களில் உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கவும் உடல் சூட்டினை தணிக்கவும் பதனீர் போன்ற இயற்கை முறை நீர் பானங்கள் மக்கள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதையும் படிங்க | லேப்டாப்பை அலேக்காக தூக்கி பையில் வைத்த கேடி பெண்.. அதிர வைக்கும் காட்சிகள்!

இயற்கையில் இருந்து கிடைக்கப்பெறும் இளநீர்,நுங்கு, தர்பூசணி போன்றஉணவு பொருட்கள் உண்ணுவதால்குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம் மேலும் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுக்கு கோடை காலங்களில் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களை வாங்கிக் கொடுப்பதை தவிர்த்து இயற்கை முறையில் கிடைக்கும் பதனீர், இளநீர், நுங்கு,தர்பூசணி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பதனால் சாலை ஓர வியாபாரிகளின் விற்பனை கூடும் என்பது மட்மில்லது இயற்கை உணவு தேடி செல்வதே தற்பாழுது உள்ள காலத்திற்கு சிறந்த முறையும் ஆகும் .

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Summer Heat, Thiruvarur