ஹோம் /திருவாரூர் /

திருவாரூரில் காட்சிப்பொருளாக இருக்கும் நெல் உலர் நிலையம் - நெல்லை உலர வைக்க சிரமப்படும் விவசாயிகள்

திருவாரூரில் காட்சிப்பொருளாக இருக்கும் நெல் உலர் நிலையம் - நெல்லை உலர வைக்க சிரமப்படும் விவசாயிகள்

காட்சிப்பொருளாக இருக்கும் நெல் உலர் நிலையம்

காட்சிப்பொருளாக இருக்கும் நெல் உலர் நிலையம்

Tiruvarur District News : நெல் உலர் நிலையம் அமைத்து 6 மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை இதனால் விவசாயிகள் வேதனை.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் வேளாண் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நெல் உலர் நிலையம் அமைக்கப்பட்டு, அதற்கு திறப்பு விழாவும்நடத்தப்பட்டது..

ஆனால், இதுவரைக்கும் இந்த நெல் உலர் நிலையத்திற்கு மின்சார இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் இந்த நெல் உலர் நிலையம் செயல்படாத நிலையில் உள்ளது. இந்த நிலையம் தற்போது செயல்பாட்டிற்குவந்தால் நெல்லை உலர வைப்பதற்கு விவசாயிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும் என்கின்றனர் மன்னார்குடி விவசாயிகள்.

மேலும் அவர்கள் கூறும் போது, ”தற்போது மழை பெய்து வருவதால் அறுவடை செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்வதில் பிரச்சனை ஏற்படுகிறது. மழைக்காலத்தில் தான் இந்த நெல் உலர் நிலையத்தின் தேவை விவசாயிகளுக்கு அதிகமாக இருக்கிறது. இதற்கு மின்சார வசதி கொடுத்தால் சுமார் 10 டன் அளவுள்ள நெல்லை இந்த உலர் நிலையத்தில் எங்களால் உலர வைக்க முடியும்.

இதையும் படிங்க : திருவாரூர் மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

காட்சிப்பொருளாக இருக்கும் நெல் உலர் நிலையம்

ஆனால் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடையும் போது கூட இந்த நிலையத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் அதிக ஈரம் உள்ள நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அதிகம் ஈரம் உள்ளதால்முளைப்பு விடும்அளவுக்கு வந்துவிடுமோ என அஞ்சுகிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே மாவட்ட நிர்வாகம் அல்லது அரசு இந்த விஷயத்தில்தலையிட்டு நெல் உலர் நிலையத்திற்கு மின் வசதியைஉடனடியாக வழங்க வேண்டும்’’ என விவசாயிகள்கோரிக்கை வைத்தனர்.

First published:

Tags: Local News, Tiruvarur