ஹோம் /திருவாரூர் /

சமூக விரோதிகளின் கூடாரமான தாய்மார்கள் பாலூட்டும் அறை - நடவடிக்கை எடுக்குமா திருவாரூர் நகராட்சி?

சமூக விரோதிகளின் கூடாரமான தாய்மார்கள் பாலூட்டும் அறை - நடவடிக்கை எடுக்குமா திருவாரூர் நகராட்சி?

திருவாரூர்

திருவாரூர்

Tiruvarur District News | திருவாரூர் நகரப் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  திருவாரூர் மாவட்டத்தின் நகர பகுதியில் அமைந்துள்ளது முத்தமிழ் அறிஞர் கலைஞர் நகர பேருந்து நிலையம்

  1990ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்லும். பேருந்து நிலையத்தின் அருகில் காய்கறி சந்தை மற்றும் பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. நகர பேருந்து நிலையத்தை மாவட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், பேருந்து நிலையத்தின் அருகில் 2015ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தாய்மார்கள் பாலூட்டும் அறையானது திறக்கப்பட்டது.

  ஆரம்ப காலத்தில் திருவாரூர் பகுதிக்கு வரும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு இந்த அறையில் பாலூட்டி அவர்களின் பசியை போக்கி வந்தனர்.

  திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை

  ஆனால், தற்போது இந்த பாலூட்டும் அறை முழுக்க முழுக்க மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களுக்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. இதனால் தாய்மார்கள் இந்த பாலூட்டும் அறையை பயன்படுத்துவே அஞ்சுகிறார்கள்.

  இதையும் படிங்க : திருவாரூரில் செயல்படாமல் இருக்கும் முன்னாள் முதல்வர் திறந்து வைத்த உழவர் சந்தை

  இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “தாய்மார்கள் இந்த அறைக்குள் செல்வதற்கே பயப்படுகின்றனர். இந்த அறைக்கு மேற்கூரை என்பதே கிடையாது. மின் விளக்கு, மின் விசிறி, குடிநீர் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை.

  உள்ளே சிதறி கிடக்கும் மதுபாட்டில்கள்

  நாங்களும் பலமுறை இங்கு இருக்கக்கூடிய நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து விட்டோம். ஆனால், இதுவரை அறையை சீரமைப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை” என்றனர்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  எனவே, திருவாரூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த அறையினை சீரமைக்க வேண்டும் என்பதே திருவாரூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tiruvarur