ஹோம் /திருவாரூர் /

மருத்துவ கழிவுகளால் குப்பை மேடாக மாறிய தண்டலை கிராமம்.. நடவடிக்கை எடுக்குமா திருவாரூர் மாவட்ட நிர்வாகம்..?

மருத்துவ கழிவுகளால் குப்பை மேடாக மாறிய தண்டலை கிராமம்.. நடவடிக்கை எடுக்குமா திருவாரூர் மாவட்ட நிர்வாகம்..?

தண்டலை கிராமத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்

தண்டலை கிராமத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்

Tiruvarur District News : அரசு மருத்துவமனை கழிவுகள் இங்கே கொட்டப்படுவதால் குப்பை மேடாக மாறிய தண்டல் கிராமம். நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம். 

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் அமைந்துள்ளது திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 1,500 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டமருத்துவ கழிவுகள் அனைத்தும் அருகில் உள்ள தண்டலை என்னும் கிராமத்தில் திறந்தவெளியில் கொட்டப்படுவதாக அந்த கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

  மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட ஊசிகள், சிரிஞ்ஜுகள், ரத்தக்கறை படிந்த பஞ்சுகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை தண்டலை கிராமத்தில் தான் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொட்டி வருவதாகவும், இதனால் தங்கள் கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர் தண்டலை கிராம மக்கள்.

  இதையும் படிங்க : திருவாரூர் விவசாயிகள் கவனத்துக்கு.. உளுந்து சாகுபடிக்கு 100% மானியம் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

  இதுகுறித்து பேசிய தண்டலை கிராம மக்கள், “இந்த தண்டலை கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பெரும்பாலானோர் விவசாயம்தான் செய்து வருகிறார்கள்.

  தண்டலை கிராமத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்

  கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக திருவாரூர் மருத்துவ கல்லூரி நிர்வாகம், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்திய மருத்துவ கழிவுகள் அனைத்தையும் எங்கள் தண்டலை கிராமத்தில் தான் கொட்டி வருகிறது.

  இதனால் எங்கள் கிராமத்தில் நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது.மேலும், இரவு நேரங்களில் சிலர் இந்த மருத்துவ கழிவுகளை தீயிட்டு எரிப்பதால், அதிலிருந்து வெளியாகும் நஞ்சுப் புகையின் காரணமாக எங்கள் கிராமத்தில் பலருக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

  தண்டலை கிராமத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்

  எனவே, திருவாரூர் மாவட்ட நிர்வாகம் இந்த மருத்துவக் கழிவுகளை எங்கள் கிராமத்தில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tiruvarur