Union
Budget 2023

Highlights

ஹோம் /திருவாரூர் /

திருவாரூர் மாவட்டம் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4ம் தேதி கும்பாபிஷேகம் - ஏற்பாடுகள் தீவிரம்

திருவாரூர் மாவட்டம் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4ம் தேதி கும்பாபிஷேகம் - ஏற்பாடுகள் தீவிரம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

Thiruvarur District | திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள புதுக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் டிசம்பர் 4ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள புதுக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் டிசம்பர் 4ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடவாசல் அருகே புதுக்குடியில் சவுந்தரநாயகி சமேத தான்தோன்றீஸ்வரர் மற்றும் அஷ்டபுஜ காலபைரவர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவுக்காக திருப்பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், சவுந்தரநாயகி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வரும் 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதை முன்னிட்டு கோவிலில் விக்னேஸ்வர பூஜை நடந்தது. மேலும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகிறது. தொடர்ந்து டிவம்பர் 3ஆம் தேதி இரவு வரை 7 கால யாகசாலை பூஜைகள் நடக்கின்றன.

Must Read : கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!

4ஆம் தேதி காலை 8 மணிக்கு 8ஆம் கால யாக சாலை பூஜை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது. இந்த விழாவுக்காக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Temple, Thiruvarur