ஹோம் /திருவாரூர் /

முன்னாள் முதலமைச்சர் அரசியல் கூட்டங்கள் நடத்திய இடம்... திருவாரூர் ஆற்றங்கரையின் தற்போதைய அவல நிலை!

முன்னாள் முதலமைச்சர் அரசியல் கூட்டங்கள் நடத்திய இடம்... திருவாரூர் ஆற்றங்கரையின் தற்போதைய அவல நிலை!

திருவாரூர் ஆற்றங்கரையின் தற்போதைய அவல நிலை

திருவாரூர் ஆற்றங்கரையின் தற்போதைய அவல நிலை

Thiruvarur District News | அரசியல் தலைவர்கள் பலரை தன் கரையில் தாங்கிய ஆறு தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ள அவலத்தை கண்டு அதை தடுக்குமா திருவாரூர் நகராட்சி?

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  திருவாரூர் மாவட்டத்தின் ஆறுகளில் மிகவும் முக்கியமானது ஓடம்போக்கியாறு. இது காவிரி ஆற்றின் கிளையாறு. இந்த ஆற்றின் மூலம் சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் மற்றும் அவர்களின் 30,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன.

  ஆனால் தற்போது, மக்கள் யாருமே பயன்படுத்தவே முடியாத அளவுக்கு, சாக்கடை கால்வாயாக மாறி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  திருவாரூர் நகராட்சியில் உள்ள அனைத்து பெரிய பெரிய வணிக நிறுவனங்களின் கழிவுகள், இந்த ஆற்றில் கலக்கப்படுகிறது. மேலும், திருவாரூர் நகராட்சியின் பாதாள சாக்கடை கழிவுகள் அனைத்தும் இந்த பாசன ஆற்றில் கலந்து துர்நாற்றம் வீச கூடிய அளவுக்கு ஆறு மாசடைந்துள்ளது. இதனால் இந்த ஆற்றை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் செய்வதறியாது வேதனையில் மூழ்கியுள்ளனர்.

  இதையும் படிங்க : சமூக விரோதிகளின் கூடாரமான தாய்மார்கள் பாலூட்டும் அறை - நடவடிக்கை எடுக்குமா திருவாரூர் நகராட்சி?

  இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஓடம்போக்கியாறு மிக முக்கியமான பாசன ஆறு. தற்போது இந்த பாசன ஆறானது நகர் பகுதியில் இருக்கக்கூடிய பெரிய பெரிய வணிக நிறுவனங்களின் ரசாயன கழிவுகளால் மாசடைந்துள்ளது.

  இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு நல்ல தண்ணீர் கிடைக்காமல்கஷ்டப்பட்டு வருகிறோம்.

  உடனடியாக திருவாரூர் நகராட்சி, ரசாயன கழிவுகளை ஆற்றில் கொட்டுவதை வணிக நிறுவனங்களை தடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தவறு செய்யும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.

  அதுமட்டுமல்லாமல் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் தனது இளம் வயதில் இந்த ஆற்றின் கரையோரங்களில் தான் நீதி கட்சியின் உடைய அரசியல் விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்தினார்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  அரசியல் தலைவர்கள் பலரை தன் கரையில் தாங்கிய ஆறு தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ள அவலத்தை கண்டு அதை தடுக்குமா திருவாரூர் நகராட்சி?

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tiruvarur