ஹோம் /திருவாரூர் /

திருவாரூரில் திரைக்கு வந்த கலகத்தலைவன்... ரசிகர்கள் கொண்டாட்டம்...

திருவாரூரில் திரைக்கு வந்த கலகத்தலைவன்... ரசிகர்கள் கொண்டாட்டம்...

திருவாரூரில் திரைக்கு வந்த கலகத்தலைவன்

திருவாரூரில் திரைக்கு வந்த கலகத்தலைவன்

Tiruvarur District News : கலகத்தலைவன் திரைப்படம் திருவாரூரிலும் வெளியானது. கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் மற்றும் கட்சியினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது.

  அதேபோல் திமுகவின் கோட்டையாக கருதப்படும் திருவாரூர் மாவட்டத்தில் கழகத் தலைவன் திரைப்படம் வெளியானது. இதனை ரசிகர்கள் மற்றும் கட்சியினர் வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

  திருவாரூர் மாவட்ட திமுக இளைஞரணியை சேர்ந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் இத்திரைப்படத்தை வரவேற்றனர்.

  காலை 10 மணியளவில் திருவாரூர் மாவட்ட இளைஞரணி தொண்டர்கள், திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பேரணியாக தைலம்மை திரையரங்கிற்கு வருகை தந்தனர்.

  இதையும் படிங்க : திருவாரூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5ம் தேதி விடுமுறை அறிவிப்பு

  பிறகு அங்கிருந்த பிள்ளையார் கோயிலில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்று சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் செய்தனர். பிறகு திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tiruvarur