ஹோம் /திருவாரூர் /

நீரில் மூழ்கிய பயிர்களை அழுகாமல் பாதுகாப்பது எப்படி? - திருவாரூர் கலெக்டர் அறிவுரை

நீரில் மூழ்கிய பயிர்களை அழுகாமல் பாதுகாப்பது எப்படி? - திருவாரூர் கலெக்டர் அறிவுரை

திருவாரூர் கலெக்டர் அறிவுரை

திருவாரூர் கலெக்டர் அறிவுரை

Tiruvarur District News : மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் திருவாரூர் மாவட்டத்தின் பல கிராமங்களில் இளம் சம்பா மற்றும் தளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீரை வடிய வைத்து வேர் பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க செய்ய வேண்டும்.

    நீரில் மூழ்கிய பயிர்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்படலாம் அதனை சரி செய்ய ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன், 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து இரவு முழுவதும் வைத்து மறுநாள் தண்ணீர் வடிந்தவுடன் மறுநாள்வயலில் தெளிக்க வேண்டும்.

    இதையும் படிங்க : திருவாரூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5ம் தேதி விடுமுறை அறிவிப்பு

    போதிய அளவு வெளிச்சம் தென்பட்ட பிறகு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும். இலை சுருட்டு புழு, தண்டு துளைப்பான் சேதாரம் அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 400 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

    பாக்டீரியா இலை கருகல் நோயின் அறிகுறி காணப்பட்டால் ஏக்கருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட், டெட்ரா சைக்கிளின் 120 கிராம் மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

    இதையும் படிங்க : ரூ.15000 சம்பளத்தில் 108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு, தகுதிகள் என்ன? - திருவாரூரில் நேர்முகத்தேர்வு தேதி அறிவிப்பு

    நெற்பயிரில் குலை நோயின் சிறு புள்ளிகள் காணப்பட்டால் ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்டாசிம் பூஞ்சானகொல்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். நோயின் அறிகுறி காணப்பட்டால் தழைச்சத்து அதாவது யூரியாவை உரமிடுவதை தவிர்க்கலாம்” என்று கூறியுள்ளார்.

    மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மைய வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம் என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மேலும் கூறியுள்ளார்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    Published by:Karthi K
    First published:

    Tags: Local News, Tiruvarur