திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது அலிவலம் கிராமம். சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த அலிவலம் கிராமத்தில் உள்ளன. இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் அரசாங்கத்தால் 30 வருடத்திற்கு முன்னால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால், தற்போது இந்த தொகுப்பு வீடுகள் அனைத்தும் சேதமடைந்து இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளதாகவும்,
உடனடியாக அரசாங்கம் இந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு, புதிதாக வீடுகளை கட்டித் தர வேண்டுமெனவும் கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும், சில நாட்களுக்கு முன்பாக இந்த கிராமத்தில் தொகுப்பு வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் மீது வீட்டு மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததால் அச்சிறுவனின் முகம் முழுவதும் சிதைந்து போன அதிர்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.
இது தொடர்பாக பேசிய அலிவலம் கிராம மக்கள், “நாங்கள் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த அலிவலம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறோம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஒன்றிய அரசாங்கத்தால் எங்களுக்கு இந்த தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டது. ஆனால், தற்போது இந்த தொகுப்பு வீடுகள் அனைத்தும் சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது.
நாங்கள் இந்த வீட்டில் வாழ்வதற்கே மிகவும் பயமாக உள்ளது. அதுவும் மழைக்காலங்களில் இந்த தொகுப்பு வீடுகளுக்குள்ளேயே இருக்க முடியாது. அப்போது நாங்கள் வீட்டின் அருகில் தற்காலிகமாக தார்ப்பாய் கொண்டும், தென்னங்கீற்றை கொண்டும் கொட்டகை எழுப்பி அதில் தான் இருப்போம்.
அதுமட்டுமில்லாமல், சில நாட்களுக்கு முன்பாக இந்த தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு சிறுவனின் முகம் சிதைந்து போய்விட்டது.
ஆகையால், உடனடியாக அரசாங்கம் எங்களுக்கு இந்த அலிவலம் கிராமத்தில் பழுதடைந்துள்ள உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு, இதே பகுதியில் பிரதான் மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் புதிய வீடுகளை கட்டித் தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruvarur