ஹோம் /திருவாரூர் /

குதிரை லாயத்தில் ஒரு தீயணைப்புத்துறை நிலையம்.. திருவாரூரில் அதிர்ச்சி!

குதிரை லாயத்தில் ஒரு தீயணைப்புத்துறை நிலையம்.. திருவாரூரில் அதிர்ச்சி!

சுமார் ஒன்றரை கோடி மதிப்பீட்டில் புதிதாக தீயணைப்பு நிலையம்  கட்டப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை கோடி மதிப்பீட்டில் புதிதாக தீயணைப்பு நிலையம்  கட்டப்பட்டுள்ளது.

Tiruvarur | புதிய தீயணைப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur | Thiruvarur

திருவாரூர் கமலாலய குளத்தின் தென்கரை பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் குதிரை லாயமாக பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நிலையம் கடந்த 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

100 ஆண்டுகளை கடந்த பழமை வாய்ந்த ஓடுகளால் வேயப்பட்ட கட்டிடம் என்பதால் மேற்கூரை முற்றிலும் பழுதடைந்துள்ளது. இதனால் மழை காலங்களில் கட்டிடம் ஒழுகுகின்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தீயணைப்பு நிலைய அலுவலகம் எதிரில் உள்ள சிமெண்ட் கட்டிடத்திற்கு நிலையம் மாற்றம் செய்யப்பட்டது.

பிறகு புதிதாக தீயணைப்பு நிலையத்தை அரசாங்கம் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை மக்கள் சார்பாக வைக்கப்பட்டது. அதனடிப்படையில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதிதாக

தீயணைப்பு நிலையமானது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் தீயணைப்பு நிலையம் பயன்பாட்டுக்கு வரவில்லை என்று திருவாரூர் மாவட்ட மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து பேசிய பொதுமக்கள், ”எங்கள் திருவாரூர் மாவட்டத்திற்கு சரியான தீயணைப்பு நிலையம் என்பதே இல்லாமல் இருந்தது. வெள்ளைக்காரன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட குதிரை லாயத்தில்தான் தீயணைப்பு நிலையம் இயங்கி வந்தது.

மாவட்ட மக்களாகிய நாங்கள், வைத்து கோரிக்கையின் அடிப்படையில் தான் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சுமார் ஒன்றரை கோடி மதிப்பீட்டில் புதிதாக தீயணைப்பு நிலையம் கட்டப்பட்டது. ஆனால் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்களை கடந்த பிறகும், இன்னும் அது பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

ALSO READ | டெல்டா விவசாயிகளே உஷார்.. "ஆனைக்கொம்பன் ஈ"-க்கள் வருதாம்..!

இதனால் திருவாரூர் மாவட்ட மக்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் தீயணைப்பு நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்வதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த புதிய தீயணைப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

First published:

Tags: Local News, Thiruvarur