முகப்பு /திருவாரூர் /

திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இவ்வளவு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறதா..!

திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இவ்வளவு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறதா..!

X
திருவாரூர்

திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி

Free Training in Government Music School : திருவாரூரில் உள்ள அரசு இசைப்பள்ளியில் கோடைகால இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூரில் உள்ள அரசு இசைப்பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை கோடை காலங்களை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளும் வகையில் குரலிசை, பரதநாட்டியம், பாடல், கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிக்கு அனுப்புகின்றனர்.

இந்த கலைகளுக்கான பயிற்சி வகுப்புகள் திருவாரூரில் கலைபண்பாட்டு துறை சார்பில் அரசு இசைப்பள்ளியில் தொடங்கியுள்ளது. இந்த வகுப்பில் திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 5 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ,மாணவிகளுக்கு வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற கலை பயிற்சி வகுப்பு நடக்கிறது.

தற்போது கோடைகால சிறப்பு வகுப்புகளாக மே 5ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை தொடர்ந்து காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் ஏராளமான மாணவ-மாணவியர் கலந்து கொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி

பயிற்சி பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், “கோடைகால பயிற்சி வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்கள் குழந்தைகள் இருவர் இந்த பயிற்சி வகுப்பில் பயில்கிறார்கள். தனியார் பயிற்சி நிறுவனங்களை விட அரசு சார்பில் நடத்தப்படும் இவ்வகை பயிற்சிகள் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. மேலும் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும்.

ஆனால் அரசு பள்ளியில் பயிற்சி பெறும் மாணவர்கள் அரசு சார்பில் நடைபெறும். நிகழ்ச்சிகளில் கூட மேடை ஏற்ற விரும்புவதில்லை எனவே அரசு சார்பில் பயிற்சி பெறும் மாணவர்களை கோவில் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். பயிற்சி வகுப்புகள் தற்போது 10 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது.

இதையும் படிங்க : மேலும் அழகாகும் ஊட்டி தாவரவியல் பூங்கா.. சீரமைப்பு பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரம்..

கூடுதல் நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே மே மாதம் முழுவதும் பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும்” என கூறினர். மேலும் இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tiruvarur