ஹோம் /திருவாரூர் /

திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் உரத்தட்டுப்பாடு - விவசாயிகள் கவலை

திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் உரத்தட்டுப்பாடு - விவசாயிகள் கவலை

மாதிரி படம்

மாதிரி படம்

Tiruvarur News | திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சம்பா, தாளடி பயிரிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான விவசாயிகள் நேரடி விதைப்பிலும் ஒரு சில விவசாயிகள் நாற்றங்காலிருந்து நாற்றுகளைப் பறித்து நடவு பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

  இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் உரத்தட்டுப்பாடு நிலவுதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிர் சாகுபடி பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

  பல தனியார் கடைகள் உரங்களை பதுக்கி வைத்துக் கொண்டும் உர மூட்டைகளை அதிக விலைக்கு விற்று வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

  பயிர்கள் பச்சையாக இருப்பதற்கும், நைட்ரஜன் தேவைக்கு முக்கியமாக கருதப்படுவது யூரியா உரமாகும்.

  பயிரிடப்பட்ட சில நாட்களிலேயே, அடி உரமான யூரியா, பயிர்களுக்கு தெளிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது யூரியா உரம் தெளிக்கப்படாததால் தங்களுடைய பயிர்கள் வாடக்கூடிய நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  இதையும் படிங்க : போதை ஆசாமிகளின் பிடியில் திருவாரூர் பேருந்து நிலையம்... வழிப்பறியும் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்!

  மேலும், பல தனியார் உரக்கடைகள் பொட்டாஸ்,யூரியா போன்ற உரங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து அவற்றை பதுக்கி வைத்துள்ளனர். உடனடியாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம் இந்த உரத்தட்டுப்பாட்டை போக்கியும், அதிகளவில் உரங்களை பதுக்கி வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்

  இது தொடர்பாக பேசிய திருவாரூர் மாவட்ட விவசாயிகள், “நாங்கள் தற்போது எங்களது மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கடுமையான உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. பயிர்களுக்கு தெளிக்கப்படக்கூடிய மிக முக்கியமான அடி உரமான யூரியா, பொட்டாஸ் போன்ற உரங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் எங்களது பயிர்கள் வாடக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

  மேலும், பல தனியார் உரக்கடைகள் உரங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து தங்களது குடோன்களில் பதுக்கி வைத்துள்ளனர். ஏற்கனவே வடகிழக்கு பருவமழையால் எங்களது விவசாயம் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த நிலையில், தற்போது உரத்தட்டுப்பாடும் எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

  இதையும் படிங்க : திருவாரூரில் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி தரவில்லை- மாவட்ட ஆட்சியர் விளக்கம்

  இதனால் திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா,தாளடி பயிர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. உடனடியாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம் இந்த உரத்தட்டுப்பாட்டை போக்க வழிவகை செய்தும் அதிக அளவில் உரங்களை பதுக்கி வைத்துள்ள தனியார் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tiruvarur