ஹோம் /திருவாரூர் /

திருவாரூரில் செயல்படாமல் இருக்கும் முன்னாள் முதல்வர் திறந்து வைத்த உழவர் சந்தை

திருவாரூரில் செயல்படாமல் இருக்கும் முன்னாள் முதல்வர் திறந்து வைத்த உழவர் சந்தை

செயல்படாமல் உள்ள திருவாரூர் உழவர் சந்தை

செயல்படாமல் உள்ள திருவாரூர் உழவர் சந்தை

Thiruvarur District News | திருவாரூர் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை உழவர் சந்தையில் விற்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  விவசாயிகள் உற்பத்தி செய்த வேளாண் விளை பொருட்களை மக்களிடமே நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக 1999ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மு.கருணாநிதியால் உழவர் சந்தை திட்டமானது தொடங்கப்பட்டது.

  இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பல விவசாயிகள் தங்களது வேளாண் பொருட்களை இந்த சந்தையில் விற்பனை செய்து பயன் பெற்று வந்தனர்.

  ஆனால், இந்த திட்டம் தொடங்க காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரிலேயே உழவர் சந்தையானது செயல்படாமல் இருந்து வருகிறது.

  பூட்டிக்கிடக்கும் திருவாரூர் உழவர் சந்தை

  இதனால் திருவாரூர் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை உழவர் சந்தையில் விற்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது திருவாரூர் உழவர் சந்தை.

  கடந்த 2000ம் ஆண்டு சுமார் 40 கடைகளுடன் இந்த உழவர் சந்தையானது செயல்பட தொடங்கியது. ஆரம்ப காலத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கி வந்த இந்த சந்தையில் சுமார்

  ஐம்பத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வேளாண் பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.

  இதையும் படிங்க : கனமழையால் மழை நீரில் மூழ்கிய 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள்.. திருவாரூர் விவசாயிகள் வேதனை

  பிறகு, 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலின்போது இந்த சந்தையானது முழுமையாக சேதமடைந்தது. அதன் பிறகு அந்த பகுதி விவசாயிகள் அருகில் இருந்த ரோட்டோரத்தில் தங்களுடைய விவசாய பொருட்களை விற்க தொடங்கினர். பிறகு தற்போது வரை இந்த உழவர் சந்தையானது செயல்படாமலேயே இருந்து வருகிறது.

  எனவே, அரசாங்கம் உடனடியாக இந்த உழவர் சந்தையை சீரமைத்து தரவேண்டுமென்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

  பராமரிப்பின்றி கிடக்கும் உழவர் சந்தை

  இதுதொடர்பாக பேசிய அப்பகுதி விவசாயிகள், “2018ம் ஆண்டு வீசிய கஜா புயலின்போது இந்த உழவர் சந்தையானது முழுமையாக சேதமடைந்து விட்டது. மேலும், இந்த உழவர் சந்தையில் சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடையாது.

  இதில் இருக்கக்கூடிய மேற்கூரைகள் அனைத்தும் எப்போது வேண்டுமானாலும் சரிந்து மேலே விழக்கூடிய நிலையில் உள்ளது. இந்த உழவர் சந்தையை சுற்றி பெரிய, பெரிய வணிக நிறுவனங்களினுடைய ஆக்கிரமிப்புகளும் அதிகமாக உள்ளது.

  இதையும் படிங்க : பாசன ஆற்றின் மீது பயிர்காப்பீடு செய்து மோசடியாக பணம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்....

  நாங்களும் இங்குள்ள அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்துவிட்டோம். ஆனால், இதுவரை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் இந்த உழவர் சந்தையை சீரமைத்து தர எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகளாகிய நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம்.

  நாங்கள் உற்பத்தி செய்த வேளாண் பொருட்களை சந்தையில் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். எனவே உடனடியாக தமிழக அரசு திருவாரூர் உழவர் சந்தையை சீரமைத்து எங்களது வாழ்க்கையில் வெளிச்சம் பாய்ச்ச வேண்டும்” என்றனர்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  Published by:Karthi K
  First published:

  Tags: CM MK Stalin, Local News, Tiruvarur