திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு விவசாயமே பிரதான பணியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் அவர்கள் தங்களது விவசாயத்துக்கு பயன்படக்கூடிய ஆடு, மாடு கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
ஆனால் இந்த பகுதிகளில் வளர்க்கப்படும் மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் நோய்வாய்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் கால்நடை மருத்துவமனை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கால்நடை மருத்துவமனை சேதமடைந்து, மிகவும் மோசமாக நிலையில் இதன் கட்டிடம் இருந்து வருகிறது. கட்டிடத்தின் உள்ளேயும், வெளியேயும் பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : திருவாரூரில் பழங்குடிகள் என்பதால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம்
திருத்துறைப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால் இந்த கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்துதான் சிகிச்சை பார்க்க வேண்டும்.
ஆனால், இந்த கால்நடை மருத்துவமனை இப்படி சேதமடைந்து இருப்பதால், பலர் இந்த மருத்துவமனைக்கு கால்நடைகளை அழைத்து வருவதற்கே அச்சப்படுகிறார்கள்.
இது தொடர்பாக பேசிய இந்த பகுதி விவசாயிகள், “திருத்துறைப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கிறது. நாங்கள் விவசாய பயன்பாட்டுக்கும் வருமானத்தும் கால்நடைகளை வளர்த்து வருகிறோம்.
அதுகளுக்கு ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால் கை வைத்தியம் செய்வோம் அது பலிக்கலன்னா இந்த கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்து தான் மருத்துவ சிகிச்சை கொடுப்போம்.
ஆனால் இந்த கால்நடை மருத்துவமனை கட்டிடம் 30 வருஷத்துக்கு முன்னாடி கட்டினது. இப்பகட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. இதனால் நாங்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்துவதற்கே மிகவும் பயப்படறோம்.
கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால் கூட இங்கு அழைத்து வந்து சிகிச்சை பெறுவதற்கு பதிலாக தங்களது வீடுகளிலேயே வைத்து நாங்களே, வைத்தியம் பார்க்கக் கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கோம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உடனடியாக திருத்துறைப்பூண்டி நகராட்சி இந்த பகுதியில் பழைய கால்நடை மருத்துவமனையை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக ஒரு கால்நடை மருத்துவமனை கட்டித் தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
செய்தியாளர் : சுர்ஜித் - திருவாரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruvarur