திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடி கீழ் புறத்தில் தேமுதிக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசினார்.
அப்போது, “ மரக்காணம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். கஞ்சா, டாஸ்மாக் மதுபானம், தானியங்கி மது இயந்திரம் இருந்த நிலையில் தற்போது கள்ள சாராயம் என ஒட்டுமொத்த தமிழகத்தை போதை தமிழகமாக மாற்றியுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
கடந்த ஆட்சியில் குடிப் பழக்கத்தால் விதவைகள் அதிகரிப்பதாக கனிமொழி தெரிவித்தார். ஆனால் திமுக ஆட்சியில்தான் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவந்தது போல் மது, கஞ்சா, உள்ளிட்டவற்றை உடனடியாக ஒழிக்க வேண்டியது திமுக அரசின் வேலை.
கள்ள சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கியது திமுக அரசின் தவறை மறைக்கும் செயல். கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் வழங்கியதை தேமுதிக கண்டிக்கிறது” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
மேலும் படிக்க... கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை உயர்வு...!
அதனைத் தொடர்ந்து பேசியவர், “ கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் . அப்போது தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
செய்தியாளர்: கு. ராஜசேகர்.திருவாரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thiruvarur