ஹோம் /திருவாரூர் /

நீச்சல் குளமாக மாறிய நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை : கவனிக்குமா நெடுஞ்சாலைத்துறை?

நீச்சல் குளமாக மாறிய நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை : கவனிக்குமா நெடுஞ்சாலைத்துறை?

நீச்சல் குளமாக மாறிய சாலை

நீச்சல் குளமாக மாறிய சாலை

Thiruvarur District News | நாகையிலிருந்து திருவாரூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையானது சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  நாகையிலிருந்து திருவாரூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையானது சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.

  இதனால் இந்த சாலையில் தினமும் விபத்துகள் ஏற்படுவதாகவும், உடனடியாக ஒன்றிய

  அரசாங்கம் இந்த தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

  நாகையிலிருந்து திருவாரூர் செல்லுக்கூடிய இந்த தேசிய நெடுஞ்சாலையை நாளோன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி மாதா கோவில், நாகூர் தர்கா போன்ற சுற்றுலா தளங்கள் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகப்படியாக பயன்படுத்தக்கூடிய சாலையாக இந்த தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

  திருவாரூர் - நாகை சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது

  ஆனால், இந்த சாலை சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்து வருகின்றது. இதனால் தினமும் இந்த சாலையில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணமே இருந்து வருகிறது.

  இதையும் படிங்க : முன்னாள் முதலமைச்சர் அரசியல் கூட்டங்கள் நடத்திய இடம்... திருவாரூர் ஆற்றங்கரையின் தற்போதைய அவல நிலை!

  இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “இந்த தேசிய நெடுஞ்சாலையை கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளாகிய நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம். அது மட்டுமல்லாமல் இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் நாள்தோறும் இப்பகுதியில் விபத்துகள் அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  இந்த சாலை இப்படி இருப்பதால் எங்களது வாகனங்களையும் நாங்கள் மெதுவாக இயக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நேரம் வீணாக விரயமாகிறது. இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் எங்களது வாகனங்களை ஓட்டுவதால் வாகனமும் அடிக்கடி பழுதாகிறது. எனவே, உடனடியாக ஒன்றிய அரசாங்கம் இந்த தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்” என்றனர்.

  First published:

  Tags: Local News, Tiruvarur