ஹோம் /திருவாரூர் /

திருவாரூர் முத்துப்பேட்டையில் கடலில் இறங்கி மீனவ படகுகளை தீடீரென சோதனையிட்ட போலீசார்.. காரணம் என்ன?

திருவாரூர் முத்துப்பேட்டையில் கடலில் இறங்கி மீனவ படகுகளை தீடீரென சோதனையிட்ட போலீசார்.. காரணம் என்ன?

மீனவ படகுகளை சோதனையிட்ட போலீசார்

மீனவ படகுகளை சோதனையிட்ட போலீசார்

Tiruvarur District News : திருவாரூர் மாவட்டத்தின்  கடலோர பகுதியான முத்துப்பேட்டையில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஒத்திகையின் ஒரு பகுதியாக மீனவர்களின் படகுகளை போலீசார் சோதனை செய்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி நடத்திய, பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், போலீசார் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

  இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமே கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவியதே ஆகும். கடலோர பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடு தான் அவர்கள் இந்தியாவிற்குள் எளிதாக ஊடுருவ காரணமாக அமைந்தது.

  இனி இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க கடலோர காவல்படையால் சாகர் காவாச் என்ற பெயரில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது. வருடத்திற்கு இரண்டு நாட்கள் தமிழகம் முழுக்க இருக்கக்கூடிய கடலோர பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

  இதையும் படிங்க : திருவாரூர் தியாகராஜர் கோயிலில் அழிந்து வரும் 400 ஆண்டு பழமை வாய்ந்த மூலிகை ஓவியங்கள்

  இதில் கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை, கியு பிரிவு, மத்திய மாநில உளவுத்துறை போலீசார் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஒத்திகையில் ஈடுபடுகின்றனர்.

  இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தின் கடலோர பகுதியான முத்துப்பேட்டையில், திருவாரூர் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

  கடலோர காவல் படை குழுமத்தின் காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி தலைமையில் படகுகளில் அதிகாரிகள் முத்துப்பேட்டை கடலுக்குள் சென்று அங்கு வரக்கூடிய மீனவர்களின் படகுகளையும், சுற்றுலா படகுகளையும் ஆய்வு செய்தனர்.

  இதையும் படிங்க : திருவாரூரில் சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம் நடத்திய கிராம மக்கள்

  மேலும், முத்துப்பேட்டை கடல் பகுதியில் தீவிரவாத ஊடுருவல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற செயல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா? என்ற ஆய்வையும் மேற்கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அனைத்து வாகனங்களையும் கடுமையான சோதனைகளுக்கு பின்பே முத்துப்பேட்டை பகுதியில் அனுமதித்தனர்.

  இது தொடர்பாக பேசிய கடலோர காவல்படை குழுமத்தை சேர்ந்த காவல் துணைஆய்வாளர் ரகுபதி, ”நாங்கள் இரண்டு நாட்களாக இந்த தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை முத்துப்பேட்டை கடற்கரை பகுதியில் நடத்தி வருகிறோம்.

  2008 ஆம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்தினார்கள். இதுபோன்ற தீவிரவாத செயல்கள் இனி கடலோரப் பகுதியில் நடக்காமல் இருப்பதற்காகவே, கடலோர காவல் படையால் சி விஜில் என்ற தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  படகுகள் மூலம் காவல்துறை அதிகாரிகள் கடலுக்குள் சென்று அங்குள்ள மீனவர்களின் படகுகளையும், சுற்றுலா படகுகளையும் ஆய்வு செய்தனர். மேலும் கடல் பகுதியில் எங்கேயாவது தீவிரவாத ஊடுருவல் இருக்கிறதா? போதைப்பொருள் ஏதேனும் கடல் வழியாக கடத்தப்படுகிறதா போன்ற சோதனைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டனர்” என தெரிவித்தார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tiruvarur