திருவாரூரில் உளுந்து சாகுபடிக்காக தெளிப்பு நீர் பாசன மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து வேளாண்மை துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் `நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் திட்ட விஞ்ஞானி செல்வ முருகன் தெரிவித்துள்ளதாவது, “உளுந்து சாகுபடிக்கு 100 சதவீதம் மானியத்துடன் உளுந்து திட்டம் செயல்படுத்த தயாராக உள்ளது. இந்தத் திட்டத்தில் விதைகள், உரங்கள் மற்றும் நடமாடும் நீர்தெளிப்பான் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 1 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் உள்ள பயனாளிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். கீழ்க்கண்ட ஆவணங்களை உரிய நேரத்தில் சமர்ப்பித்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் :
மன்னார்குடி வட்டாரத்தில் செருமங்கலம், காரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, ஆலங்கோட்டை, காரிக்கோட்டை, மூவாநல்லூர் மற்றும் துளசேந்திரபுரம், நீடாமங்கலம் வட்டாரத்தில் வடுவூர், புதுக்கோட்டை, வடபாதி, தென்பாதி, அக்ரஹாரம், சாத்தனூர், எடமேலையூர், கீழப்பட்டு, அய்யம்பேட்டை, சோனாப் பேட்டை, கட்டக்குடி, அன்னவாசல், கொத்தங்குடி, காளாச்சேரி, காரக்கோட்டை, ராணி தோப்பு, புளியங்குடி, நெம்மேலி, பருத்திக்கோட்டை, தளிக்கோட்டை, சமையன் குடிக்காடு. நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டாரத்தில் அணைப்பாடி, மகாராஜபுரம், அகலங்கன், கடுவங்குடி, திருமீயச்சூர், கொத்தங்குடி, செங்காந்தி, பேரளம், திருக்கோட்டாரம், கடகம், சுரைக்காயூர், ஆலத்தூர் மற்றும் வஸ்திராஜபுரம்.
இதையும் படிங்க : யூரியாவுக்கு பதில் மீன் அமிலம் - இயற்கை உரம் குறித்து விவரிக்கும் விவசாயி
முத்துப்பேட்டை வட்டாரத்தில் மங்கள், கீழக்காடு, மற்றும் உதய மார்த்தாண்டபுரம் மேற்குறிப்பிட்ட வட்டாரத்தில் உள்ள குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Farmers, Local News, Thiruvarur, Tiruvarur