ஹோம் /திருவாரூர் /

டெல்டா விவசாயிகளே உஷார்.. "ஆனைக்கொம்பன் ஈ"-க்கள் வருதாம்..!

டெல்டா விவசாயிகளே உஷார்.. "ஆனைக்கொம்பன் ஈ"-க்கள் வருதாம்..!

சம்பா,தாளடி பயிர்களை தாக்கும் ”ஈ”

சம்பா,தாளடி பயிர்களை தாக்கும் ”ஈ”

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvarur | Thiruvarur

நெற்பயிரில் 50 சதவீத மகசூல் இழப்பை ஏற்படுத்தும் மிக முக்கியமான பூச்சி இனமாக இந்த ஆனைகொம்பன் பூச்சியினம் கருதப்படுகிறது.

இந்த பூச்சியால் தாக்கப்பட்ட பயிரின் இலைகள் யானையின் தந்தத்தை போல் காட்சியளிப்பதால்

இது "ஆனைக்கொம்பன் நோய்" என்று அழைக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் காவிரி டெல்டா விவசாயத்தில் 40 சதவிகிதத்திற்கு மேல் மகசூல் இழப்பை இந்த ஆனைக்கொம்பன் நோய் தாக்குதல்ஏற்படுத்தியது. ஆனைக்கொம்பன் ஈ முட்டைகளை இலைகளின் நுனியில் இடும், பின்னர் அதிலிருந்து இளம் புழுக்கள் வளர்ந்து குருத்துகள் சென்று, செசிடோஜன் என்ற நச்சு பொருளை பயிரின் உட்செலுத்தும். இதனால்பயிர் இலையின் வடிவம் யானையின் தந்தம் போல் மாறிவிடும்.

மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆனைக்கொம்பன் நோய் தாக்குதல் அதிகரித்திருப்பதால், திருவாரூர் மாவட்ட நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகள் இந்த ஆனைக்கொம்பன் நோய் தாக்குதலைகட்டுப்படுத்தும் வழிகள் குறித்து தெரிவித்தார், ”நெற்பயிரை அறுவடை செய்த பின் நிலத்தை உடனடியாக உழவு செய்ய வேண்டும். வரப்புகளில் புல் வகைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வயல்வெளிகளில் அதிக தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க | திருவாரூர் மக்களுக்கு நற்செய்தி... சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க மானியம்..

சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் இருக்கும் படி பயிர்களை நடவு செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உரங்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

மாறாக ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தழைச்சத்து உபயோகப்படுத்தக் கூடாது. சூரிய வெளிச்சத்தில் இயங்கக்கூடிய தானியங்கி புற ஊதா விளக்குப் பொறியை பயன்படுத்தி யானை கொம்பன் ஈக்களை கவர்ந்து, அவற்றை அழிக்கலாம்.

மேலும், பயிர்களில் யானை கொம்பன் ஈ தாக்குதல் பொருளாதார சேதநிலையை தாண்டும் பட்சத்தில், கார்போசல்பான் 25 ஈ.சி (400 மில்லி) அல்லது பிப்ரோனில் 5 எஸ்.சி (400 கிராம்) அல்லது தயோ மீத்தாக்சாம் 25 W,(40 கிராம்) ஆகிய பூச்சிக்கொல்லிகளில் ஏதாவது ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் தெளித்தால் அதிகப்படியாக பரவியுள்ள ஆனைக்கொம்பன் நோயை கட்டுப்படுத்தலாம்” என்று அறிவுரை வழங்கினார்.

First published:

Tags: Agriculture, Local News, Tiruvarur