திருவாரூரில், பல்கலைக்கழக அளவில் கல்வியில் சிறந்து விளங்கிய ஏழை மாணவிகள் ஒரு நாள் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் இயங்கி வருகிறது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
இங்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிலையில் அந்த கல்லூரியில் படித்து, பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 12 ஏழை மாணவிகளை தங்களது கல்லூரிக்கு வரச் செய்து அவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஒரு நாளுக்கு வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது கல்லூரி நிர்வாகம்.
முதல்வராக பொறுப்பேற்ற 12 மாணவிகளும் கல்லூரிக்குச் சென்று பேராசிரியரிடம் அங்கு படிக்கும் மாணவர்களின் கல்வித்திறன் பற்றி கேட்டறிந்தனர்.
மேலும், கல்லூரியின் சுற்றுப்புறம்,கழிப்பறை, கேண்டின் போன்ற பகுதிகளில் மாணவர்களுக்கு சரியான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், கல்லூரிக்கு வந்த சில பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் சில குறைகளையும் கேட்டறிந்தனர். எங்களது கல்லூரியில் ஒரு நாள் முதல்வராக பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், நிச்சயமாக நாங்கள் மேலும் படித்து உயர்ந்த பதவிகளுக்கு செல்ல இந்த நிகழ்வு பயன் உள்ளதாக அமையும் என்றனர்.
மேலும் இது தொடர்பாக பேசிய அந்த மாணவிகள், நாங்கள் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் மதிப்பெண் பெற்றதால் கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு ஒரு நாள் முதல்வராக பணியாற்றக்கூடிய இந்த வாய்ப்பினை தந்தது.
எங்களது பெற்றோர்கள் பெரும்பாலானோர் கிராமங்களில் விவசாயக் கூலி வேலை செய்பவர்கள் தான். அவர்களுடைய மகள்களாகி நாங்கள், ஒரு தனியார் கல்லூரிக்கே முதல்வராக பணியாற்றி இருக்கிறோம் என்பதே மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.
ஒரு நாள் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்று நாங்கள் பேராசிரியர்களிடம் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களின் கல்வித் திறன் குறித்து கேட்டறிந்தோம். எப்படியெல்லாம் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்கபிக்கிறார்கள் என்பதையும் ஆய்வு செய்தோம் என கூறினார்.
மேலும் கல்லூரியில் உள்ள கூடிய மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை, கேண்டீன் போன்ற இடங்களில் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்தோம்..
பிறகு கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தோம் என தெரிவித்தனர்.
பல்கலைக்கழக அளவில் மதிப்பின் பெற்றதற்காக கல்லூரி நிர்வாகம், எங்களை ஒரு நாள் முதல்வராக பணியமர்த்தி அழகு பார்க்கும் என்று நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று.
நாங்கள் நிச்சயமாக நன்கு படித்து இதே போன்ற பல கல்லூரிகளில் உயர்ந்த பதவிகளுக்கு செல்ல இந்த நிகழ்வு ஊக்குவிப்பதாக அமையும் என்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: College student, Local News, Thiruvarur