முகப்பு /செய்தி /திருவாரூர் / வாய்க்காலில் கவிழ்ந்த பேருந்து... 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்.. திருவாரூரில் பரபரப்பு..!

வாய்க்காலில் கவிழ்ந்த பேருந்து... 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்.. திருவாரூரில் பரபரப்பு..!

விபத்துக்குள்ளான பேருந்து..

விபத்துக்குள்ளான பேருந்து..

திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியிலிருந்து தொண்டியகாடு செல்லும் அரசு நகர பேருந்து, பாண்டி வளைவு அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது,  எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தின் ஓட்டுநர் வேகமாக பேருந்தை திருப்பியதாக கூறப்படுகிறது.

இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  பேருந்து கவிழ்ந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பேருந்தில் சிக்கி இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டனர்.

இதையும் படிக்க : திருவாரூரில் சிக்கிய கடப்பாரை கொள்ளையர்கள்

இந்த சம்பவம் குறித்து உடனடியாக எடையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் பயணிகளை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விபத்து குறித்து எடையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் : கு. ராஜசேகர் (திருவாரூர்)

First published:

Tags: Bus accident, Tamil News, Tiruvarur