திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கினர். இதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 2 பேரை தேடி வருகின்றனர்.
மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத், ஹரி பிரசாத், கோபாலகிருஷ்ணன், ஆந்திராவை சேர்ந்த அபிராம் ஆகியோர் ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள வேத பாட சாலையில் படித்து வருகின்றனர். இவர்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது வழக்கத்தை விட அதிக தண்ணீர் வந்த நிலையில் விஷ்ணுபிரசாத் ஆற்றில் சிக்கியுள்ளார்.
செய்தியாளர்: கோவிந்தராஜ் ( திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thiruvarur