ஹோம் /திருவாரூர் /

திருவாரூரில் ஏக்கருக்கு ரூ.10,000... விவசாயிகளுக்கு மானியம் அறிவிப்பு..

திருவாரூரில் ஏக்கருக்கு ரூ.10,000... விவசாயிகளுக்கு மானியம் அறிவிப்பு..

மாதிரி படம்

மாதிரி படம்

Tiruvarur District News : திருவாரூரில் ஏக்கருக்கரூ10000 விவசாயிகளுக்கு மானியம் அறிவிப்பு.. திருவாரூரில் விவசாயிகளுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மானியம் வழங்கப்படுதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூரில் விவசாயிகளுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம்) சார்பில் 2022-23ஆம் நிதியாண்டில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறணைகள் வழங்க ரூ.1 கோடி செலவில் ஒரு பயனாளிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 என்ற மானியம் ஒதுக்கீடு செய்து அரசாணை வரப்பெற்றுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கறணைகள் வளர்க்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களை சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பரிந்துரைப்பார்.

இதையும் படிங்க : திருவாரூரில் பழங்குடிகள் என்பதால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம்

பயனாளிகளுக்கு விதைத் தொகுப்பு, புல்கறணை களுடன் அத்தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி, கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றிற்கான செலவினங்கள் ஒரு பயனாளிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 என்ற மானியத் தொகைக்குட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

தீவன விதைகள் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசா யிகளுக்கு வழங்கப்படும்.

மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் இணையதளத்தில் குடும்ப அட்டை, சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம், திட்ட அறிக்கை ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் பதிவே ற்றம் செய்யப்பட வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி எதிரில், நாகை பைபாஸ் ரோடு, திருவாரூர் என்ற முகவரியிலும், 04366-250017 மற்றும் 9445029478 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் அடையலாம். இவ்வாறு திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Tiruvarur