ஆரணில் தனியார் பேருந்து விபத்தில் சிக்கியதில் 53 பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வேலூரில் இருந்து திருவண்ணாமலை வழியாக சாத்தனூர் அணை கிராமத்துக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. சந்தவாசல் கிராமத்தை சேர்ந்த டிரைவர் சசிக்குமார் என்பது பேருந்தை இயக்கி வந்துள்ளார். ஆரணி அருகே வண்ணாங்குளம் கிராமத்தின் கூட்ரோடு அருகில் செல்லும்போது கனரக கிரேன் வாகனத்தின் மீது பேருந்து உரசி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தனியார் பேருந்தின் பின் டயர் கழன்று சாலையின் அருகே விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 53 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்கள். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பொதுமக்கள் உதவியுடன் தனியார் பேருந்தை சாலையிலிருந்து கிரேன் மூலம் அப்புறபடுத்தி சாலையை சீர்படுத்தினார்கள். டிரைவர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
செய்தியாளர்: ம.மோகன்ராஜ், ஆரணி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arani