முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு!

அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு!

கத்தியுடன் நுழைந்த நபர்

கத்தியுடன் நுழைந்த நபர்

Tiruvannamalai | திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் இளைஞர் கத்தியுடன் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி கர்நாடக மாநில இளைஞர் ஒருவர் கத்தியுடன் நுழைந்து பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கொடுவாகத்தியுடன் புகுந்து  கர்நாடக இளைஞர் ஆணையர் அலுவலகத்திற்குள் அனுமதி இன்றி உள்ளே நுழைந்து அங்கிருந்த கண்ணாடிகளை உடைத்தார். இதனைக்கண்ட அங்கிருந்த பக்தர்கள் சிலர்  அந்த இளைஞரை பிடித்து தாக்கினர்.

பக்தர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்று கிழே விழுந்ததில் அவரது காலில் முறிய்வு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார்  அந்த இளைஞரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

top videos

    இதனிடையே அவருடன் வந்த காதலி ஜெனிபர் என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். தங்களை சிலர் துரத்தியதாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க தனது காதலன் ப்ரீத்தம் கோயிலுக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தார். பெங்களூருவில் இருந்து இவர்கள் எதற்கு திருவண்ணாமலைக்கு வந்தார்கள்? இவர்களை விரட்டியது யார் ஆகியவை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    First published:

    Tags: Local News, Tiruvannamalai