முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / ஆரணி அருகே அனுமதியின்றி நடந்த எருதுவிடும் விழா.. காளைகள் துன்புறுத்தப்பட்டதாக புகார்!

ஆரணி அருகே அனுமதியின்றி நடந்த எருதுவிடும் விழா.. காளைகள் துன்புறுத்தப்பட்டதாக புகார்!

மாதிரி படம்

மாதிரி படம்

Tiruvannamalai News : ஆரணி அருகே எருது விடும் விழாவில் காளைகள் துன்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட எருது விடும் விழாவில் காளைகள் துன்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் அனுமதியின்றி எருது விடும் விழா நடைபெற்றது. இதில், 300க்கும் மேற்பட்ட காளைகள் அவழ்த்துவிடப்பட்டன. அப்போது காளை மாடுகள் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை கடக்க வேண்டுமென்பதற்காக, காளையின் அந்தரங்க பகுதியில் கயிறால் இறுக்கிக்கட்டுவது போன்ற செயல்களில் காளை உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் காளை விடும் விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், இதுபோன்று காளைகளை துன்புறுத்தும் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எருதுவிடும் விழாவில், காளைகள் முட்டியதில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Tiruvannamalai