முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / வீட்டு கேஸ் அடுப்பில் கள்ளச்சாராயம்... காய்ச்சும்போதே சிக்கிய பெண்... 100லி சாராயம் பறிமுதல்..!

வீட்டு கேஸ் அடுப்பில் கள்ளச்சாராயம்... காய்ச்சும்போதே சிக்கிய பெண்... 100லி சாராயம் பறிமுதல்..!

சாராயம் காய்ச்சிய பெண்

சாராயம் காய்ச்சிய பெண்

Arani Home liquor | ஆரணி அருகே போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது வீட்டில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்த பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

  • Last Updated :
  • Arani (Arni), India

ஆரணி அருகே வீட்டிற்குள் கேஸ் அடுப்பில் சாராயம் காய்ச்சிய பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கள்ளச் சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதனால், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, மாநிலம் முழுவதும் சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பவர்களை பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உட்கோட்டத்தில் இதுவரை சாராயம் காய்ச்சிய மற்றும் சாராயம் விற்பனை செய்தோர் 40க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இதே போன்று போளூர் பகுதியில் தொடர் சாராய தொழிலில் ஈடுபட்டதில் சுமார் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையில் வடுகசாத்து பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்ட போது மீனா என்கின்ற பெண் அவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் அடுப்பில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். இதனை கண்டறிந்த போலீசார், மீனாவை கைது செய்து அவரிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் ஆரணி அருகே வேதாஜிபுரம் காட்டுப் பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபடும் போது சுரேஷ் மற்றும் ஆறுமுகம் இருவரும் சாராயம் விற்பனை செய்யும்போது கையும், களவுமாக சிக்கி கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 1000 லிட்டர் சாராயத்தை அழித்தனர்.

இதையும் படிங்க; மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம்... புதிய சட்ட அமைச்சர் நியமனம்...!

மேலும், ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள் கைது செய்து அவர்களிடம் இருந்து 700 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது.  இதுவரை ஆரணி சுற்றுவட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

top videos

    செய்தியாளர்: ம.மோகன்ராஜ், ஆரணி.

    First published:

    Tags: Arani, Crime News, Local News, Tiruvannamalai