முகப்பு /செய்தி /திருவள்ளூர் / காவலர் அவ்வளவு கெஞ்சியும் பலன் இல்லை.. மாணவியை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்!

காவலர் அவ்வளவு கெஞ்சியும் பலன் இல்லை.. மாணவியை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்!

பெற்றோரிடம் கெஞ்சிய காவலரின் வீடியோ

பெற்றோரிடம் கெஞ்சிய காவலரின் வீடியோ

காவல் அதிகாரியே வீடு தேடி வந்து அறிவுறுத்தியதால், அச்சத்தில் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல மறுப்பு

  • Last Updated :
  • Thiruvallur, India

ஊத்துக்கோட்டை அருகே, மாணவியை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் அறிவுறுத்தியும், பள்ளிக்கு அனுப்பாதது பலரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர்பேட்டையில் பழங்குடியின சமூகத்தினர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்ற பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், நடிகர் தாடி பாலாஜி உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். எனினும், காவலரின் முயற்சி வீணாகும் வகையில், மாணவியை குடும்பத்தினர் பள்ளிக்கு அனுப்பாதது, சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வெயிலுக்கு ரெஸ்ட்... தமிழ்நாட்டை கூல் பண்ணப் போகும் மழை... 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

காவல் அதிகாரியே வீடு தேடி வந்து அறிவுறுத்தியதால், அச்சத்தில் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல மறுப்பதாகவும், மாணவி கல்வியை தொடர உதவ வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

top videos
    First published:

    Tags: Thiruvallur, Viral Video