முகப்பு /செய்தி /திருவள்ளூர் / கட்டுடல் ஆசையால் கிட்னி பெயிலியர்.. ரத்தவாந்தி எடுத்து பலியான ஜிம் மாஸ்டர்.. வெளியான ஷாக் தகவல்!

கட்டுடல் ஆசையால் கிட்னி பெயிலியர்.. ரத்தவாந்தி எடுத்து பலியான ஜிம் மாஸ்டர்.. வெளியான ஷாக் தகவல்!

உயிரிழந்த பயிற்சியாளர் ஆகாஷ்

உயிரிழந்த பயிற்சியாளர் ஆகாஷ்

Tiruvallur Body Builder Dead | கடந்த ஒரு வாரமாக மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஆகாஷ் உயிரிழந்தார்.

  • Last Updated :
  • Thiruvallur, India

ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் எடுத்துக்கொண்டதால், உடற்பயிற்சி கூட பயிற்சியாளர், ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகேயுள்ள நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது, 25 வயது மகன் சபரிமுத்து என்கிற ஆகாஷ், நடுகுத்தகையில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் மாஸ்டராக  பணியாற்றி வந்துள்ளார். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிகளை குவித்த ஆகாஷ், மார்ச் மாதம் 26ஆம் தேதி நடைபெற இருந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க, கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். மேலும், அதிகளவில் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி ஆகாஷுக்கு ரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, உறவினர்கள் அவரை உடனடியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தண்டலம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் ஆகாஷின் 2 சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆபத்தான நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷுக்கு, தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் ஆகாஷ் உயிரிழந்தார். கடும் உடற்பயிற்சியுடன் கட்டுடலை கொண்டுவர அதிகளவில் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொண்டதே மரணத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. ஜிம் மாஸ்டரின் மரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அமைச்சுப் பணியாளர்கள், காவல் நிலைய எழுத்தர்களுக்கு நெல்லை எஸ்பி பாராட்டு - ஏன் தெரியுமா?

top videos

    இதேபோன்று, கடந்த மாதம் கடலூர் மாவட்டத்தில் நடந்த ஆணழகன் போட்டியில் பங்கேற்ற, சேலம் மாவட்டம் கொல்லப்பட்டியைச் சேர்ந்த வீரர் ஹரிஹரன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ஆகாஷின் மரணம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    First published:

    Tags: Body Building, Thiruvallur