முகப்பு /செய்தி /திருவள்ளூர் / படிக்க சொன்ன பெற்றோர்... 4ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு... திருவள்ளூரில் சோகம்...!

படிக்க சொன்ன பெற்றோர்... 4ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு... திருவள்ளூரில் சோகம்...!

9 வயது குழந்தை தற்கொலை

9 வயது குழந்தை தற்கொலை

Thiruvallur 4th Standard Child Committed End Life | திருவள்ளூர் நகர காவல் துறையினர் சிறுமி உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

  • Last Updated :
  • Thiruvallur, India

திருவள்ளூரில் தந்தை கண்டித்ததால் 4ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் பெரியகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும்,  9 வயதில் பிரதிக்ஷா என்ற மகளும் உள்ளனர். 9 வயது பிரதிக்ஷா திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பிரதிக்ஷா பாடல்களுக்கு வாயசைத்து நடனமாடி இன்ஸ்டாகிராமில் 50க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் சிறுமி பிரதிக்ஷா தனது பாட்டி வீட்டின் எதிரில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை கண்ட பிரதீக்ஷாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் கற்பகம் சிறுமியிடம், ‘விளையாடியது போதும். வீட்டிற்கு சென்று படி’ என கண்டித்துள்ளனர். அத்துடன்,  வீட்டின் சாவியை சிறுமி பிரதிக்ஷாவிடம் கொடுத்துவிட்டு இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்று வீடு திரும்பி உள்ளனர்.

இதையும் படிங்க: கட்டுடல் ஆசையால் கிட்னி பெயிலியர்.. ரத்தவாந்தி எடுத்து பலியான ஜிம் மாஸ்டர்.. வெளியான ஷாக் தகவல்!

வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்ததால் பலமுறை சிறுமி பிரதிக்ஷாவின் பெயரை அழைத்தும், கதவை தட்டியும் திறக்காததால் பயந்து போன தந்தை கிருஷ்ணமூர்த்தி ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது சிறுமி வெள்ளை நிற சிறிய துண்டினால் ஜன்னல் கம்பியில் கட்டி தூக்கிட்டு கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறுமியை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

top videos

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் சிறுமி உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    First published:

    Tags: Crime News, Thiruvalluvar