முகப்பு /செய்தி /திருவள்ளூர் / திருவள்ளூரில் 10-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு..

திருவள்ளூரில் 10-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு..

முதலிடம் பிடித்த மாணவி

முதலிடம் பிடித்த மாணவி

  • Last Updated :
  • Thiruvallur, India

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள தனியார் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பில் 495 மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆறுமுகசாமி கோவில் தெருவில் வசிப்பவர் சீனிவாசன். அவரது மகள் வேதா. வேதா, திருத்தணியில் உள்ள சுதந்திரா மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

அப்போது திருவள்ளூர் மாவட்டத்திலேயே 495 மதிப்பெண்கள் பெற்று வேதா முதலிடம் பிடித்துள்ளார். சந்தோஷம் அடைந்த பள்ளி நிர்வாகத்தின் தலைவர் ரங்கநாதன், மாணவியை பள்ளிக்கு அழைத்து வாழ்த்தினார். பின்பு அங்கு மாணவியுடன் வந்த பெற்றோர் இனிப்புகள் வழங்கி சந்தோஷத்தை கொண்டாடினர்.

top videos
    First published: