முகப்பு /செய்தி /திருவள்ளூர் / பாசமாய் வளர்த்த தந்தை இறந்த சோகம்... விரக்தியில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு..!

பாசமாய் வளர்த்த தந்தை இறந்த சோகம்... விரக்தியில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு..!

உயிரிழந்த மாணவி

உயிரிழந்த மாணவி

Thiruvallur suicide | தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து அவரின் நினைவால் வாடி வந்துள்ளார் கல்லூரி மாணவி.

  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

செங்குன்றம் அருகே தந்தை இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து தந்தையின் நினைவில் வாடி வந்த கல்லூரி மாணவி கீர்த்தி தனது அம்மாவுடன் அதே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த கீர்த்தி யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்து வந்துள்ளார்.

வழக்கம் போல் தாய் வேலைக்கு சென்றுவிட கீர்த்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தந்தையின் மரணத்தால் வேதனையின் உச்சிக்கு சென்ற மகள், மின்விசிறியில் புடவைகளால் தூக்கிட்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கீர்த்தியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கீர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்.

top videos
    First published:

    Tags: Crime News, Suicide, Thiruvallur