முகப்பு /செய்தி /திருவள்ளூர் / திருவள்ளூர் மக்களே... இன்று இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது...

திருவள்ளூர் மக்களே... இன்று இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது...

நத்தம் பகுதியில் நாளை மின்தடை

நத்தம் பகுதியில் நாளை மின்தடை

Thiruvallur power cut | மின் தடை தொடர்பான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது

  • Last Updated :
  • Chennai, India

பராமரிப்பு பணி காரணமாக சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியின் பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக மின் வாரியம், துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை அனுப்பி, மின் மாற்றி, மின் விநியோகப் பெட்டி உதவியுடன் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. மின் வாரிய சாதனங்களில் எப்போதும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் இருக்கும். அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அதன்படி பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில், குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.இதுகுறித்த விவரம் பத்திரிகைகள், குறுஞ்செய்திகள் மூலமாக நுகர்வோருக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் (12.05.2023) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

top videos

    கும்மிடிப்பூண்டி : சிட்கோ கும்மிடிபூண்டி தொழிற்சாலை வளாகம் பகுதி, பில்லாகுப்பம், காரம்பேடு, நாகராஜகண்டிகை, சூரபூண்டி,  பொம்மாஜி குளம், நேமலூர்  மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும் இதில் அடங்கும்.

    First published:

    Tags: Power Shutdown, Thiruvallur