முகப்பு /செய்தி /திருவள்ளூர் / அம்மன் கழுத்தில் இருந்து 4 சவரன் தாலி திருட்டு..! சென்னையில் துணிகரம்

அம்மன் கழுத்தில் இருந்து 4 சவரன் தாலி திருட்டு..! சென்னையில் துணிகரம்

திருவள்ளூர்

திருவள்ளூர்

Thiruvallur | புழல் அருகே கோவிலில் சாமி கும்பிட வந்தவர் பட்டப்பகளில் அம்மன் கழுத்தில் இருந்த 4 சவரன் தாலியை  திருடி சென்றார். இது குறித்து தகவலறிந்த போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நகையை திருடியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Thiruvallur, India

சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகரில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பூசாரி கடந்த 3ஆம் தேதி காலை வழக்கம் போல பூஜைகளை செய்து விட்டு காலை சிற்றுண்டி உண்பதற்காக சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த 4 சவரன் தாலி சங்கிலி திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் கோவிலில் வந்து சாமி கும்பிடுவது போல அக்கம் பக்கம் நோட்டமிட்டு யாருமில்லாத நேரத்தில் கருவறைக்குள் சென்று அம்மன் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை திருடி செல்கிறார். இந்த காட்சிகளின் அடிப்படையில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மன் கழுத்தில் இருந்து தங்க தாலியை திருடி சென்ற நபரை கைது செய்தனர்.

மேலும் படிக்க... கள்ளர் திருக்கோலத்தில் மலைக்கு புறப்பட்டார் அழகர்..!

விசாரணையில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த லிங்கமூர்த்தி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து புழல் போலீசார் கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கோவிலில் துணிகரமாக வந்து அம்மன் கழுத்தில் இருந்து நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: கண்ணியப்பன், திருவள்ளூர்

top videos
    First published:

    Tags: Crime News, Thiruvallur