திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சத்தியா(40). இவர் திருவள்ளூர் பகுதியில் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இதேபோல் திருவள்ளூர் புங்கத்தூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேந்தன். இவர் திருவள்ளூர் பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வருகிறார்.
மேலும் வெற்றிவேந்தன் திருவள்ளூர் சுற்றியுள்ள தனியார் தொழிற்சாலையில் மிரட்டி பணம் வசூலிப்பது, பெரிய தொழில் அதிபர்களை மிரட்டி பணம் வசூலிப்பது, மேலும் அதை நிலத்தில் முதலீடு செய்து ரியல் எஸ்டேட் தொழில் செய்வது என செய்து வருகிறார். இதனால் வெற்றிவேந்தனும், சத்யாவும் நண்பர்களாக இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் வெற்றிவேந்தனுக்கு லோகேஷ், ரவி ஆகியோர் நண்பராக இருந்து வந்துள்ளனர். அவர்களும் வெற்றிவேந்தன் ரியல் எஸ்டேட்டில் இணைத்து கொண்டனர். எப்போதுமே நிலம் வாங்குவது, விற்பனை செய்வது, தனியார் தொழிற்சாலைகள் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்து பணத்தை வசூல் செய்வது உள்ளிட்ட வேலைகளுக்கு வெற்றி வேந்தன், சத்தியா, லோகேஷ் மற்றும் ரவியை பயன்படுத்தி வந்துள்ளார்.
ஏனெனில் சத்தியா வெற்றிவேந்தனுக்கு அதிக நெருக்கமானதால் கட்டப்பஞ்சாயத்து செய்யும் பணத்தில் சக்திக்கு அதிகமாக பணம் கொடுப்பது மற்றும் லோகேஷ், ரவிக்கு வெறும் 2000 ரூபாய் மட்டும் பணம் கொடுத்து மதுபானம் ஊற்றி கொடுப்பதாக இருந்து வந்துள்ளார். இதில் வெற்றிவேந்தன், சத்தியா இருவரும் ரவி மனைவி தொடர்பாக குடிபோதையில் தவறாக ரவியிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரத்தில் இதனால் ரவி, லோகேஷுடன் இணைந்து வெற்றி வேந்தன் மற்றும் சத்யா இருவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : மழை வேண்டி பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராமம்.. கர்நாடகாவில் சுவாரஸ்யம்!
இந்நிலையில், சத்தியா குடியிருக்கும் போளிவாக்கம் பிள்ளையார் கோவில் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த ரவி மற்றும் லோகேஷ் ஆகியோர் சத்தியாவை வீட்டிற்கு சென்று அழைத்துக் கொண்டு வீட்டு அருகே உள்ள கோழி பண்ணைக்கு சென்றுள்ளனர்.
அப்போது, “என் மனைவி பற்றி என்னிடமே தவறாக பேசுவாயா” எனக்கூறி மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ரவி, சத்தியா இடுப்பில் சரமாரியாக குத்தியுள்ளார்.
மேலும், லோகேஷ் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது சத்தியா இடுப்பில் சொருவிய கத்தியை தனது வலது கையால் பிடித்துள்ளார். இதில் சத்தியா கட்டை விரல் நடுவிரல் துண்டாகியுள்ளது. பின்னர் சத்தியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் ரவி, லோகேஷ் தங்களது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதையடுத்து, சத்தியாவை மீட்ட பொதுமக்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் வலது கையில் கத்தி குத்துப்பட்டு விரல் துண்டானதால் கையில் 40 தையல்களும், இடுப்பில் குத்துப்பட்ட இடத்தில் 30 தையல்களும் என 70 தையல்கள் போடப்பட்டு சத்தியா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக சத்தியாவின் மனைவி புவனேஸ்வரி மணவாள நகர் காவல் நிலையத்தில் தனது கணவருடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நண்பர்களான லோகேஷ், ரவி ரியல் எஸ்டேட்டில் வரும் பணத்தை பங்கு பிரித்து தராததால் அவரை ரவி, லோகேஷ் இணைந்து கொலை முயற்சி செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, புகாரை பெற்ற மணவாள நகர் போலீசார் அவர்களை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். கட்டப்பஞ்சாயத்து செய்யும் பணத்தை முறையாக பிரித்து தராததால் கட்டப்பஞ்சாயத்து தலைவனை பயமுறுத்த அவருடைய நண்பரை கொல்ல முயற்சித்துள்ள சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Thiruvallur