முகப்பு /செய்தி /திருவள்ளூர் / திருவள்ளூரில் காட்டன் சூதாட்டம் நடத்தி வந்த திமுக நிர்வாகி கைது...

திருவள்ளூரில் காட்டன் சூதாட்டம் நடத்தி வந்த திமுக நிர்வாகி கைது...

கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி

கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி

Thiruvallur Crime News | திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியில் காட்டன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

திருவள்ளூரில் காட்டன் சூதாட்டம் நடத்தி வந்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியில் காட்டன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளன.அதன்பேரில் ஆரணி அஞ்சல் நிலையம் அருகே ஓரிடத்தில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட பலர் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் மட்டும் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஆரணி, எஸ்.பி. கோயில் தெருவில் வசித்து வரும் அவர் நிலவழகன் என்ற செந்தில் குமார் என்பது தெரியவந்தது.செந்தில் குமார் ஆரணி பேரூர் திமுக பகுதி துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி ஆரணி பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.

இதையும் படிங்க: தனுஷ்கோடி மன்னார் வளைகுடா கடலில் தத்தி தத்தி சென்ற ஆமைக்குஞ்சுகள்!

செந்தில்குமார் தலைமையில் தான் சூதாட்டம் நடத்தப்படுவதாகவும், தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். செந்தில்குமாரை வெங்கல் காவல் நிலையம் கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்த, போலீஸார், பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.தப்பி ஓடிய ஆரணியைச் சேர்ந்த நித்யராஜ் என்பவரையும் போலீசார் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்.

First published:

Tags: Crime News, Local News, Thiruvallur