முகப்பு /செய்தி /திருவள்ளூர் / அம்பேத்கர் பிறந்தநாள் விழா... அம்பத்தூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி - திருமாவளவன் நேரில் அஞ்சலி

அம்பேத்கர் பிறந்தநாள் விழா... அம்பத்தூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி - திருமாவளவன் நேரில் அஞ்சலி

உயிரிழந்த விசிக உறுப்பினர்

உயிரிழந்த விசிக உறுப்பினர்

VCK Member death | அம்பத்தூரில் கொடி கம்பங்களை எடுக்க முயன்ற போது விசிக உறுப்பினர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

  • Last Updated :
  • Ambattur, India

அம்பத்தூரில் கொடிக்கம்பங்களை அகற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் அருகே அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வி சிக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்காக கொடிக்கம்பங்கள் நடப்பட்டு இருந்த நிலையில் ஒரு கொடி கம்பத்தை எடுக்க முயன்ற போது மேலே தாழ்வான நிலையில் சென்ற மின்சார ஒயர் மீது உரசியதில் விசிக இளைஞரணி உறுப்பினர் அம்பேத் என்பவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், உயிரிழந்த விசிக உறுப்பினருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

First published:

Tags: Ambattur Constituency, Crime News, Death, Thol. Thirumavalavan, VCK