முகப்பு /செய்தி /திருவள்ளூர் / அருவியில் குளித்த சென்னை இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்...!

அருவியில் குளித்த சென்னை இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்...!

அருவிக்கு குளிக்க சென்ற 3 பேர் பலி

அருவிக்கு குளிக்க சென்ற 3 பேர் பலி

Thiruvallur | திருப்பதி அருகே அருவி நீரில் மூழ்கி சென்னையை சேர்ந்த அண்ணன், தம்பி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  • Last Updated :
  • Thiruvallur, India

ஆந்திராவில் அருவியில் குளிக்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஆந்திர எல்லையில் உள்ள நாகலாபுரத்தில் , பூபதியேஸ்வர கோனே அருவி உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள இந்த அருவியில் குளிக்க, தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் செல்வது வழக்கம். அதன்படி சென்னையில் இருந்து இளைஞர்கள் 5 பேர், கோனே அருவிக்குச் சென்றுள்ளனர். அவர்கள், அங்குள்ள பாறையில் ஏறி தண்ணீரில் குதித்துள்ளனர்.

மேலும் படிக்க...குழந்தையை கூட தூக்காத கணவர்... வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல்... விரக்தியில் விபரீத முடிவெடுத்த மனைவி..!

top videos

    அப்போது நீண்ட நேரமாகியும் 3 பேர் வெளியே வராததால் சக நண்பர்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தண்ணீரில் மூழ்கிய மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் ஆகியோரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

    First published:

    Tags: Thiruvallur