முகப்பு /திருப்பூர் /

Tiruppur | தென்னை மரங்களுக்கு இலவசமாக வரப்புகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

Tiruppur | தென்னை மரங்களுக்கு இலவசமாக வரப்புகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், தென்னந்தோப்புகளில் வட்ட பாத்தி மற்றும் வரப்புகள் அமைக்க  விவசாயிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Madathukulam, India

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், தென்னந்தோப்புகளில் வட்ட பாத்தி மற்றும் வரப்புகள் அமைக்க விவசாயிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பணிகளுக்கு ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் தென்னை சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. தென்னந்தோப்புகளில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சுற்றிலும் வட்டப்பாத்திகள் எடுக்கவும், வரப்புகள் அமைப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை. மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். கிராம ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகள், அதே ஊரில், ஆதார் முகவரி உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

ஒன்றிய அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில், ஊராட்சிகளுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள், சிறு, குறு விவசாயி சான்று, ஆதார், அடங்கல், ரேஷன் கார்டு நகல், பாஸ்போஸ்ட் சைஸ் போட்டோ-2, ஆகியவற்றுடன், மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகலாம்.

மேலும் விபரங்களுக்கு, துங்காவி, மெட்ராத்தி, தாந்தோணி, காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, கடத்தூர், மைவாடி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரனை 96598 38787 என்ற எண்ணிலும், வேடப்பட்டி, சோழமாதேவி, கொழுமம், பாப்பான்குளம் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் நித்யராஜ் 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Tiruppur