ஹோம் /திருப்பூர் /

சூறாவளியில் இருந்து வாழையை காக்கும் சவுக்கு மரங்கள் - இது தான் இங்கு விஷயமே!

சூறாவளியில் இருந்து வாழையை காக்கும் சவுக்கு மரங்கள் - இது தான் இங்கு விஷயமே!

திருப்பூர்

திருப்பூர்

Whip Trees Protecting Bananas From Cyclones | திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், சூறாவளி காற்றில் இருந்து  பணப்பயிரான வாழை மரங்களை காப்பாற்ற சவுக்கு மரங்கள் நடவு செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், சூறாவளி காற்றில் இருந்து பணப்பயிரான வாழை மரங்களை காப்பாற்ற சவுக்கு மரங்கள் நடவு செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் இதன்படி செய்யும் போது அதிகப்படியான வாழை மரங்களை சேதங்கள் இல்லாமல் காக்க முடியும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவிநாசி ஒன்றியம் அசநல்லிபாளையத்தில், வேளாண்மை துறை சார்பில் வாழை தோட்டங்களை சுற்றிலும் சவுக்கு நாற்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு தலைமை வகித்தார்.

இதையும் படிங்க ; திருப்பூர் மக்கள் எளிய முறையில் வரி செலுத்த புதிய ஏற்பாடு

அப்போது  அவர் பேசியதாவது:

அறுவடையின்போது சூறாவளி காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.  வாழை தோட்டங்களை சுற்றிலும் சவுக்கு நாற்று நடவு செய்யும்போது மரங்கள் முறிந்து விழுவதில் இருந்து பாதுகாக்க முடியும். விவசாயிகளுக்கு பொருளாதார இழப்புகள் கணிசமான அளவில் தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய ஆராய்ச்சியாளர் கலையரசன், வேளாண்மை உதவி அலுவலர் வினோத்குமார், வேளாண்மை துறை அலுவலர் சுஜி, தோட்டக்கலை துறை அலுவலர் அனுஷியா, வேளாண்மை பொறியியல் துறை அலுவலர் மஞ்சு, ஊராட்சி துணை தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tiruppur